
வெயிலில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும். உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணெய் பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரை அதிகமாக குடிக்கலாம்.
கோடை காலத்தில் பெண்களுக்கு அதிகமான பாதிப்பு ஏற்படும். பெரும்பாலும், உடம்பில் வெயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தலைக்கு குடையும், கண்ணுக்கு கண்ணாடியும், காலுக்கு செருப்பும் அவசியமாகும்.
அதிகமான அளவு வியர்வை வெளியேறுவதைத் தடுத்தால் வேர்க்குருவைக் கட்டுப்படுத்தலாம். அதிகமாக வியர்க்கும்போது குளித்தால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது; வியர்வை நின்ற பிறகே குளிக்க வேண்டும். வியர்க்கும் போது பவுடர் பூச வேண்டாம். நன்றாக கழுவி துடைத்த பிறகே பவுடரை பூச வேண்டும்.
அடிக்கடி உடம்பை கழுவவேண்டும். பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பை உடலில் நன்கு தேய்த்துக் குளிக்க வேண்டும். அதிகமாக உணர்ச்சி வசப்பட வேண்டாம். எக்காரணம் கொண்டும் சிறுநீரை அடக்க வேண்டாம். இதனால் சிறுநீர் கடுப்பு ஏற்படும். ஜாக்கிரதை.