sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

ஜில்லு, ஜிட்டு!

/

ஜில்லு, ஜிட்டு!

ஜில்லு, ஜிட்டு!

ஜில்லு, ஜிட்டு!


PUBLISHED ON : மே 06, 2016

Google News

PUBLISHED ON : மே 06, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செந்தில் ஒரு வேடுவன். வேட்டை ஆடுவதில் மிகவும் கெட்டிக்காரன். வேட்டையாடியவற்றை கடைவீதியில் விற்று கிடைக்கும் பணத்தில், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து வாழ்க்கையை ஓட்டி வந்தான். அவனுக்கு பாரி என்ற மகன் இருந்தான். மிகவும் புத்திசாலிப் பையன்.

செந்தில்... ஆகாயக் கூரையை தொட்டு நிற்கும் மலை முகடுகளில் கூடு கட்டி, குஞ்சு பொரித்து வாழும் பறவைகளை மிக லாவகமாக அம்பு எய்து பிடிப்பதில் வல்லவன். இந்த வகை பறவைகளுக்கு ஏகப்பட்ட விலை கிடைக்கும். அதுவும் பணவசதி படைத்தவர்கள் போட்டா போட்டி போட்டு, பண்டிகை நாட்களில் என்ன விலை வேண்டுமானாலும் கொடுத்து வாங்கிச் செல்வர்.

செந்திலுக்கு பல நாட்களாகவே மனதில் ஒரு சின்ன ஆசை இருந்தது. 'அப்படி என்ன இருக்குது இப்பறவையின் மாமிசத்தில்? என்றாவது ஒருநாள் இப்பறவையை வீட்டிற்கு எடுத்துச் சென்று மனைவியிடம் கொடுத்து சமைக்கச் சொல்ல வேண்டும்' என்று நினைத்துக் கொள்வான்.

ஆயினும் மகன் பாரிக்கு அப்பா இப்படி அழகிய பறவைகளையும், குயில், மான் இவைகளையெல்லாம் வேட்டையாடி பணம் சம்பாதிப்பதில் இஷ்டமில்லை. 'அப்பா ஏன் இப்படி ஈவு, இரக்கம் கொஞ்சமும் இன்றி உயிர்வதை செய்கிறார். வேறு எத்தனை வேலைகள் இருக்கின்றன. விவசாயம் செய்யக் கூடாதா? ஆடு, மாடுகள் மேய்க்கக் கூடாதா' என்று மனதிற்குள் அப்பாவுடன் சண்டை போடுவான்.

அன்று மதியம் குடிசை வாசலில் உட்கார்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்த போது, அவன் கை எட்டும் தூரத்தில் பொத்தென்று ஏதோ விழும் சத்தம் கேட்டு திரும்பினான். அங்கே, கூரிய அம்பு ஒன்று அப்பறவையின் காலை இரண்டாக பிளக்க... அதன் அருகே உடைந்த நிலையில் அதன் முட்டை... அதிலிருந்து ஒரு குட்டி பாப்பா... ம்...ம்... ம்... என்று மிக சன்னமாக முனகியபடி முட்டையிலிருந்து தலையை வெளியே நீட்டியவாறு, வெளியே வர முயற்சித்துக் கொண்டிருக்கிறது.

தன்னையும் மீறி பாரி, ''அம்மா!'' என்று அலறினான்.

மகனின் அலறலைக் கேட்ட அவன் அம்மா சிவகாமி, மிகப் பதட்டமாக வெளியே ஓடி வந்து, ''என்னடா ராசா?'' என்றாள்.

''அம்மா! நிச்சயமாக இது அப்பாவின் வேலைதான். அப்பா வரும் முன் இதனை நான் காட்டுக்குள் சென்று ஒளித்து வைத்து விட்டு வருகிறேன்!'' என்று சொல்லி சென்று ஓடி மறைந்தான்.

பாரி சென்ற சிறிது நேரத்தில், செந்தில் வீட்டிற்கு வந்தான்.

''ஏய் புள்ளே! நான் குறிவெச்சு அடிச்ச, 'ஸ்டீலா' பறவையை எங்கே? அது இங்கேதானே விழுந்திருக்கும்.'' என்று கேட்டான்.

''அட, அந்த பறவை எங்கே போயிடுச்சோ? என்னைய வந்து கேட்டா நானென்ன பதில் சொல்றது. பாவம் புள்ளே இன்னும் பள்ளிக்கூடத்திலேர்ந்து வரலே... வந்தா பசிம்மான்னு சொல்லுவான். நான் அவனுக்காக அவசரமா சமையல் செஞ்சுக்கிட்டு இருந்தேன். நீங்க என்னடான்னா இப்படி கத்தறீங்க...'' என்று சொல்லிவிட்டு சமையல் செய்ய சென்றுவிட்டாள்.

'அந்த பறவை அவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்ததினாலே ஒருவேளை விழுந்த வேகத்தில் திசை மாறி வேறு எங்கேனும் விழுந்திருக்குமோ? எத்தனை ஆசை ஆசையாக அதனைத் தேடி ஓடி வந்தேன். பாரி வரட்டும் அவனையும் விசாரிக்கலாம்.

அவனுக்குத்தான் நான் இப்படி வேட்டையாடுவது பிடிக்காதே... அதனை எங்கேனும் கொண்டு போய் ஒளிச்சு வெச்சு வைத்தியம் செய்து பறக்க விடுவானோ? யார் கண்டது... வரட்டும் பய, கேக்கற கேள்வியிலேயே உண்மையை சொல்ல வைக்கிறேன்' என்று கருவிக்கொண்டிருக்கும் போதே பாரி வந்து விட்டான்.

''ஏண்டா நீ இன்னும் பள்ளிக் கூடத்திலிருந்து வரலைன்னு உன் அம்மா கவலைப்பட்டுட்டு இருக்குறா. நீ என்னடான்னா ஊர் முழுவதும் ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு ஆடி அசஞ்சுட்டு வர்றே...'' என்று கோபமாக கேட்டான் செந்தில்.

பாரிக்கு தெரியும் எப்படியும் அம்மா தன்னை காப்பாற்றி விடுவாள் என்று. உள்ளூற அம்மாவுக்கு நன்றி சொன்னான்.

''ஊர் சுத்தலே... ஸ்பெஷல் கிளாஸ் வெச்சாங்க அதான் லேட்,'' என்றான்.

''ஏலே! உண்மையைச் சொல்லு... அந்த 'ஸ்டீலா' பறவையை நீ என்னடா பண்ணினே?''

''என்ன அப்பா சொல்றீங்க.. ஸ்டீலா பறவையை நா என்ன பண்ணினேன்னு கேக்கறீங்களே... அவ்வளவு உயரமான மலையை என்னால் எப்படி ஏற முடியும்... அப்படியே ஏறிப் போனாலும் அந்த பறவை கூட்டை நான் தொட்டுவிட முடியுமா? அப்புறம் அந்த பறவைக்கூட்டம் என்னை சும்மா விட்டுடுமா?''

''ஏலே! நீ கெட்டிக்காரன்னு நினைச்சுக்கிட்டு கேனத்தனமா பேசாதே... நீ ஏண்டா மலை ஏறி போகணும்? நா ஒருத்தன் இருக்குறேன் இல்ல... அதுங்களை குறி வெச்சு பூமிக்கு கொண்டார... இந்த எடக்கு பேச்சுத்தானே வாணாங்கறது. உண்மைய சொல்லுடா... வர்ற வழிலே அது வுளுந்து கெடக்கறதை எங்கனாச்சும் பார்த்தியா? ஒடனே அதனை எடுத்துப்போய் காட்டுக்குள் எங்கனாச்சும் ஒளிச்சு வெச்சு பச்சிலை வைத்தியம் பண்ணினாயா...? சொல்லுடா!'' என்று அதட்டினான்.

''இன்னா அப்பா இது... இப்படி பெரிய பெரிய பழியை எல்லாம் என் மேல் சுமத்துறீங்க... நா பள்ளிக்கூடத்திலேந்து வர்ற வழி மெயின் ரோடு. உங்க கணக்குப்படி அது அங்கனே வுழுந்துருச்சுன்னா இத்தினி நேரம் அதனை பார்த்த ஜனங்க வுட்டு வைப்பாங்களா? காட்டுக்குள்ளே எங்கனா வுளுந்துச்சுன்னா சொல்லுங்க, நா போயி தேடி எடுத்துட்டு வரேன்'' என்றான்.

''சரி... சரி எனக்கு உன்னோட வம்படிச்சுட்டு நிக்க நேரமில்லை. கடைவீதிக்கு போக நேரமாச்சு... நீயும் உன் அம்மாவுமா போயி காட்டுக்குள்ளாற அலசிப் பாருங்க... அப்புறம் பேசிக்கிடலாம்...''

''ஏ புள்ளே! நீ உன் மவனோடு காட்டுக் குள்ளாற போயி நல்லா தேடிப்பாரு,'' சொல்லிவிட்டு கூடை நிறைய வேட்டையாடிய பறவைகளை சுமந்தவாறு முணுமுணுத்தபடியே கடைவீதியை நோக்கி புறப்பட்டான்.

''அம்மா, அப்பாவுக்கு ஏம் மேலே சந்தேகம். அதனாலே சீக்கிரமா நம்மளை வேவு பார்க்க திரும்பினாலும் திரும்பிடுவாரு சீக்கிரமா... வாம்மா உயிருக்கு துடிக்குதம்மா அந்த அம்மா பறவை... நீ ஏதேனும் பச்சில வைத்தியம் செய்யும்மா. அதுக்கு உடம்பு நல்லா சொகமாகும் வரை அப்பா கண்ணுல படாம அதுங்களை காப்பாத்தி அப்புறம் அதுங்களை அனுப்பிவிடலாம்,'' என்றான்.

அம்மாவும் மகனும் புறப்பட்டனர். அம்மா பறவை வேதனையில் முனகி, முனகி புரள அதன் குட்டிப் பாப்பாக்கு தன் அம்மாவின் வேதனை ஒண்ணும் புரியவில்லை.

அதன் குட்டி தலையை இப்படியும், அப்படியும் ஆட்டியபடி தத்தி... விழுந்து... தந்தி விழுந்து குப்புற அடித்து ஓய்ந்து போய் படுத்து விட்டது.

சிவகாமி பச்சில வைத்தியத்தில் கெட்டிக்காரி. உடனே அம்மா பறவையை அள்ளி எடுத்து அதன் மேல் இருந்த ரத்தத்தை துடைத்தாள். பரபரப்பாக அங்கும், இங்கும் தேடி சில பச்சிலைகளை பறித்து வந்து சாரு பிழிந்து அதன் மேல் தடவி முழுவதுமாக தடவி... மேலும் சில பச்சிலைகளை அதன் உடலை சுத்தி கட்டிவிட்டாள்.

''அம்மா! இந்த குட்டி பாப்பாவுக்கு என்னம்மா செய்யப்போறே?''

''மகனே! என் கவலை எல்லாம் உன் அப்பன் கண்ணிலே படாம இவைகளை நாம் எங்கு ஒளித்து வைப்பது என்பதுதான். அங்குலம் அங்குலமா இந்த காட்டை உன் அப்பன் தேடுவான். உன் மேலும் ஒரு கண் வைத்திருப்பாரு. அதனாலே ஜாக்கிரதை. இதுங்களை கண்காணிச்சு இவைகளுக்கு உணவு கொடுத்து எப்படீடா சமாளிக்க போறோம்னு கவலையாக இருக்குடா.

''நல்லவேளை ஒன் அப்பன் கோவில் பக்கம் தலை வைத்துக் கூட படுக்கமாட்டான். அதனாலே இந்த அம்மா பறவையை அப்படியே அலுங்காமே தூக்கிட்டு போயி பூசாரி ஐயா கிட்டே விவரத்தை சொல்லி ஜாக்கிரதையா பார்த்துக்கிட சொல்லுப்பா... நா அப்புறமா போயி அவுகளை பார்க்க வரதா சொல்லிவிட்டு வா,'' என்று சொல்லி ஒரு டப்பாவில் சில தானியங்களையும் போட்டு கொடுத்தாள்.

''இந்த தானியங்களை பெரிய பறவை பக்கத்திலேயே தூவி வெக்கச் சொல்லு... பசி எடுத்தா திங்கட்டும். ஆனால், இந்த பச்சை இலைக்கட்டு, வலியை கொறச்சு நல்ல தூக்கத்தை கொடுக்கும். அவரு கோவிலுக்கு போகையிலே இந்த சின்னப்பயலையும் அவரு கையில எடுத்துட்டு போவட்டும். அவர் வீட்ல எலி நடமாட்டம் இருந்துச்சுன்னா இதனை கடிச்சுட போறது பாவம்.''

''அம்மா! இந்த சின்னப் பாப்பாவை விட்டு பிரிய எனக்கு மனசே இல்லேம்மா... என் கையிலேயே வெச்சுக்கிறேன் அம்மா!'' என்றான் பாரி.

- தொடரும்...

சாரதா விஸ்வநாதன்






      Dinamalar
      Follow us