PUBLISHED ON : பிப் 26, 2022

சூரியகாந்தி செடியின் தாயகம் அமெரிக்கா; அங்கு, மஞ்சள், அரக்கு, செம்மஞ்சள் உட்பட பல வண்ணங்களில் காணலாம். சூரியன் இருக்கும் திசையில் முகம் காட்டும்; அது மறைந்ததும், மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி விடும்.
தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் அதிகம் காணப்படுகிறது. இச்செடி, கி.பி.,16ம் நுாற்றாண்டில் தான், ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு கப்பலில் எடுத்து வரப்பட்டது.
சூரியகாந்தி விதையில் இருந்து எண்ணெய் எடுக்கும் கலையை கண்டறிந்தது ஆசிய, ஐரோப்பிய கண்டங்களை உள்ளடக்கிய நாடான ரஷ்யா.
முக்கனிகளாக, மா, பலா, வாழையை வரிசைப்படுத்துகிறோம். அது போல, சோளம், அவரை, பூசணியை மூன்று சகோதரி என குறிப்பிடுவது மெக்சிகோவில் வழக்கமாக உள்ளது.
இவற்றுக்கு அடுத்து நான்காவது சகோதரியாக, சூரியகாந்தியை சேர்த்துள்ளனர். ஐரோப்பாவில் மலர்ச்சியின் சின்னமாக கருதப்படுகிறது சூரியகாந்தி.
- ராஜிராதா
