தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சூப்பர் டாடிஸ்!

சூப்பர் டாடிஸ்!

சூப்பர் டாடிஸ்!


PUBLISHED ON : செப் 28, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 28, 2012


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுவாக உலகில் பிறக்கும் அனைத்து உயிரினங்களையும், அதன் தந்தையை விட தாய்தான் அதிகம் பாதுகாத்து வளர்க்கும். ஆனால், இதற்கு மாறாக சில உயிரினங்களில் தாய்க்கு பதில், தந்தையே அக்கறையோடு வளர்க்கின்றன.

தென் ஆப்ரிக்க காடுகளில், 'மர்மோசெட்' என்னும் குரங்கு இனம் உள்ளது. இவற்றில் தாய் குரங்கு குட்டி ஈன்றதும், தந்தை குரங்கு குட்டியை எடுத்து குளிப்பாட்டி துடைத்து தாய் குரங்கிடம் கொடுக்கும். குரங்கு குட்டி பால் குடிக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் தந்தைதான் குட்டியை பாதுகாக்கும். குட்டி உணவு சாப்பிட தொடங்கியதும் தந்தை குரங்குதான் உணவு ஊட்டி விடும்.

ஓநாய்களில் பெண் ஓநாய், குட்டி ஈனும் நேரத்தில் ஆண் ஓநாய் குகை வெளியில் காவல் காக்கும். குட்டி பிறந்ததும், தாய்க்கும் குட்டிக்கும் தந்தை ஓநாய் பல நாட்களுக்கு உணவு கொண்டு வந்து தரும். குட்டிகள் வளரும் போது, தந்தை அதனுடன் விளையாடி கொண்டே, இரை பிடிக்கவும், எதிரிகளிடமிருந்து தப்பிக்கவும் கற்று கொடுக்கும்.

அதே போல, கடலில் வாழும் மீன் வகைகளில் கடல் குதிரை போல, பூனை மீன்களில் ஆண் மீன்கள் தான் தங்களுடைய முட்டைகளை தங்கள் வாயில் வைத்து கொண்டு அலையும். முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர சில வாரங்களாகும். அதுவரையில் இந்த ஆண்மீன்கள் உணவு சாப்பிடாமல் பட்டினியாய் இருந்து முட்டைகளை காக்கும் குட்டீஸ்!

சூப்பர் டாடீஸ்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us