தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தமிழ் தந்த உயர்வு!

தமிழ் தந்த உயர்வு!

தமிழ் தந்த உயர்வு!


PUBLISHED ON : ஆக 29, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம் மாவட்டம், ஆத்துார், முல்லைவாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில், 19-93ல், 8ம் வகுப்பு படித்தபோது, தமிழாசிரியராக வந்தார் மணிமுத்து ஐயா. முறையாக மொழியை பயிற்றுவித்தார். பிழையின்றி எழுத நுாதன பயிற்சி தந்தார்.

அன்றன்று நடத்தும் பாடத்தில் தேர்வு வைப்பார். மாணவர்களைக் கொண்டே, எழுதிய விடைத்தாள்களை, மாற்றி மாற்றித் திருத்தச் சொல்வார். இந்த பயிற்சியால், பிழையின்றி எழுதக் கற்றுக் கொண்டேன்.

உயர் கல்வியில் வரலாறு, இதழியல் பாடங்களில் பட்டங்கள் பெற்றேன். என் பேச்சை கேட்பவர்களும், எழுத்தைப் பார்ப்பவர்களும், 'நீ தமிழ்த்துறையில் பட்டம் பெற்றவனா...' என்று விசாரிப்பர்.

சிறுவர்களுக்காக, ஐந்து புத்தகங்களையும், நாவல் ஒன்றையும் எழுதி வெளியிட்டுள்ளேன்.

பத்திரிகைத்துறையில், 19 ஆண்டுகளாக பணியாற்றிவருகிறேன். இவற்றுக்கு அடிப்படையாக அமைந்தது அந்த ஆசிரியர் கற்பித்த தமிழ். இப்போது அதே பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

தற்போது என் வயது, 39; வாழ்வில் உயர்வுகளின் போதெல்லாம், தமிழாசிரியரை மானசீகமாக வணங்கிக் கொள்கிறேன்.

மோ.கணேசன், சென்னை.

தொடர்புக்கு: 94442 96929


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us