PUBLISHED ON : செப் 05, 2020

பெட்ரோலிய கச்சா எண்ணெயின் கழிவுப் பொருள்தான் தார். இது, குளிர்ந்த நிலையில் கெட்டியாக இருக்கும். சூடாக்கினால் 230 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் திரவமாக மாறும்.
சில இடங்களில் இயற்கை படிவாக காணப்படுகிறது தார். தென் அமரிக்காவில் உள்ள டிரினிடாட் தீவில், ஏரிபோல படர்ந்து காணப்படுகிறது. இங்கு மட்டும், 15 மில்லியன் டன் உள்ளது.
இதன் பயன்பாட்டை, 4500 ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துவிட்டான் மனிதன். சிந்துவெளி மொகஞ்சதாரோ நாகரிகத்தில் கட்டடங்களில் செங்கல் இணைத்து பூச, தார் பயன்படுத்தியுள்ளதாக, புதைபொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தாருடன், ஜல்லிக்கற்களை கலந்து, சாலை அமைக்கும் தொழில்நுட்பம் ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில், கி.பி.1845ல் செயல்பாட்டுக்கு வந்தது. அது காற்று மழையால் பாதிக்கப்படவில்லை. வாகன டயர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை. எனவே தார் சாலையின் தேவை அதிகரித்தது. 1920ம் ஆண்டுக்குப்பின் தான் தார் சாலைகள் பெருகிவருகின்றன.
- பொ.பாலாஜிகணேஷ்
