
கடலுார் மாவட்டம், நெல்லிகுப்பம், அரசு பள்ளியில், 1967ல், படித்த போது, வகுப்பாசிரியர் மிகவும் நகைச்சுவையாக பாடம் சொல்லி கொடுப்பார்.
நீதி போதனை வகுப்புகள் அவ்வப்போது நடைபெறும். நேரம் கிடைக்கும் போதெல்லாம், நல்ல கருத்துகளை ஆசிரியர்கள் எடுத்து சொல்வர். அதனால், பெரியவர்களை மதித்து போற்றவும், பெற்றோரை மனம் கோணாமல் கவனிக்க வேண்டும் என்ற உணர்வும் ஏற்பட்டது.
அவற்றை, இன்றுவரை தவறாது கடைபிடித்து வருகிறேன்; பொறுப்புடன் கவனிக்கிறேன்.
வகுப்பறையில் கிடைத்த நீதி போதனையால், மூத்தவர்கள் மீது மதிப்பு, மரியாதை போன்ற நல்ல பழக்கங்களை கடைபிடிக்கும் பண்பு வாழ்வில் ஏற்பட்டது. நல்லவர்களாக வளரவும், மனிதநேயத்தை கடைபிடிக்கவும் வாய்ப்பாக அமைந்தது.
பள்ளியில் கற்றதை மனதில் கொண்டு, என் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும், நீதியை போதித்து வருகிறேன். அதற்கு, சிறுவர்மலர் இதழில் வெளியாகும், சிறுகதைகளை பயன்படுத்தி வருகிறேன்.
- வி.மணி, கடலுார்.
தொடர்புக்கு: 93676 34632

