PUBLISHED ON : அக் 05, 2012

பொதுவாக உலகில் சிவப்பு நிறம் ஆபத்தை குறிக்கும் என்பர். ஆனால், அக்கீ என்ற பழத்தை பொறுத்தவரையில், அது உண்மையல்ல என்று இதை படித்த பின் தெரிந்து கொள்வீர்கள் குட்டீஸ்!
அக்கீ பழம் ஜமைக்கா தீவின் தேசியக்கனி. இந்த கனியானது காயாக இருக்கும் போது மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். நன்றாக கனிந்த பின் ரத்த சிவப்பு நிறத்தை பெற்றுவிடும்.
இந்த அக்கீ காயாக இருக்கும் போது விஷத்தன்மை வாய்ந்தது. பழமான பிறகே சாப்பிட தகுந்தது. கனிந்து பழுத்தவுடன் இந்த பழம் தானாகவே வெடித்து, பருத்த வெள்ளை நிறக் கொட்டையை வெளியே காட்டும். அதன் பெயர் ஆரில். இந்த, 'ஆரில்' என்ற கொட்டை மட்டுமே சாப்பிடத் தகுந்தது.
காயாக இருக்கும்போது விஷத் தன்மையுடன் இருந்து, பழமான பிறகு சாப்பிடத் தகுந்ததாக மாறியதன் காரணம், சூரிய ஒளி தான் என்கின்றனர். பழம் வெடித்து பிளக்கும் போது உள்ளே நுழையும் சூரியனின் கதிர்கள் ஆரில்களின் விஷத்தன்மையை நீக்கி விடுகிறது.
நன்றி சூரியா!
