sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

இயல்வது கரவேல்!

/

இயல்வது கரவேல்!

இயல்வது கரவேல்!

இயல்வது கரவேல்!


PUBLISHED ON : பிப் 27, 2021

Google News

PUBLISHED ON : பிப் 27, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஞ்சூர், மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்த சிறு கிரமாம். பள்ளி வசதி கிடையாது. சிறுவர், சிறுமியர் ஐந்து கிலோ மீட்டர் தொலைவு காட்டு வழியில் நடந்து சென்று படித்தனர்.

அன்று, கிராமத்தில் சினிமா படப்பிடிப்பு நடந்தது.

வேடிக்கை பார்க்க குவிந்தனர் மக்கள்.

புத்தக பையுடன் முனியனும், கருப்பனும் பள்ளிக்குப் புறப்பட்டனர். வழியில் படப்பிடிப்பை, சிறிது நேரம் வேடிக்கை பார்த்தனர்.

நடிகைக்காக, விதம் விதமாக ஐஸ்கிரீம் வாங்கி வைத்திருந்தது படக்குழு.

மலை பிரதேசத்தில் குளிர் அதிகமாக இருந்தது. எனவே, அவற்றை நிராகரித்து விட்டார் நடிகை.

வாங்கியிருந்தவற்றை பாதுகாக்க, படக் குழுவுக்கு போதிய வசதி இல்லை. எனவே, வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்கு, ஐஸ்கிரீமை பகிர்ந்து கொடுத்தனர். அடித்துப் பிடித்து பலரும் வாங்கினர்.

முனியன் கையிலும் ஒன்று கிடைத்தது.

புத்தகப்பையில் போட்டுக்கொண்டான். நேரமாகவே, பள்ளிக்குப் புறப்பட்டான்.

பங்கு தரும்படி, உடன் வந்த கருப்பன் வழிநெடுக கெஞ்சினான்.

'தர மாட்டேன்; வேண்டுமானால் படப்பிடிப்பு குழுவிடம் போய் வாங்கிக் கொள்...'

பிடிவாதமாக மறுத்து விட்டான் முனியன்.

கருப்பனுக்கு ஏமாற்றம் தந்தது.

முனியன் மனம் இறங்காதா என பரிதாபமாக பின்னால் சென்றான்.

பள்ளியை அடைந்தனர்.

முதுகில் ஈரம் படுவதை உணர்ந்தான் முனியன்.

உடனே, புத்தகப் பையை திறந்தான். புதிதாக வாங்கிய புத்தகங்கள் நனைந்து கிழிந்து கிடந்தன. அதன் மத்தியில், சினிமாக்குழு தந்த ஐஸ்கிரீம் அட்டைப்பெட்டி நசுங்கி கிடந்தது.

கசங்கிய பெட்டியில் ஒன்றும் இல்லாதது கண்டான். ஏமாற்றத்துடன் அதை வீசி ஏறிந்தான்; மனம் சுருங்கிவிட்டது.

வகுப்புக்கு வந்தார் ஆசிரியர்.

அனைவரும் ஓடி அவரவர் இடத்தில் அமர்ந்தனர்.

பாடத்தை துவக்கினார். ஆத்திச்சூடியில் வரும், 'இயல்வது கரவேல்' என்ற கவிதை வரிகளை எடுத்து விளக்க முயன்றார்.

மிகவும் எளிமையாக, 'சுலபமாக தர முடிந்த பொருளை கூட, தராமல் மறைத்து வைத்தால், நமக்கே பெரிய ஏமாற்றத்தை தந்து விடும் என்பது தான் இதன் பொருள்...' என்று விளக்கினார் ஆசிரியர்.

தவறை உணர்ந்தான் முனியன்.

குழந்தைகளே... பகிர்ந்து உண்ணப் பழகுங்கள்.

துடுப்பதி ரகுநாதன்






      Dinamalar
      Follow us