தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஆல்ப்ஸ் மலை!

ஆல்ப்ஸ் மலை!

ஆல்ப்ஸ் மலை!


PUBLISHED ON : செப் 13, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 13, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆசியாவில் புகழ் பெற்ற இமய மலையைப் போலவே, ஐரோப்பாவில் புகழ் பெற்றது ஆல்ப்ஸ் மலை. ஆல்ப்ஸ் மலை ஒரு தனிப்பட்ட அமைப்பல்ல. மத்திய ஐரோப்பாவிலுள்ள மலை கூட்டங்களே ஆல்பஸ். பல மலைத் தொடர்களால் ஆனது ஆல்ப்ஸ். இத்தாலி யின் சமவெளியிலிருந்து ஸ்விட்ஸர்லாந்தின் வடக்குப் பகுதி, ஆஸ்திரியா வரை வியாபித் துள்ளது ஆல்பஸ் மலைகள்.

இம்மலைகள் உருவாகப் பல மில்லியன் ஆண்டுகள் ஆகியுள்ளன. ஒரே தொடராக வும் ஆல்ப்ஸ் காணப்படவில்லை. மேற்கு, மத்திய, கிழக்குப் பகுதிகள் என்று இதை மூன்று பாகமாகப் பிரிக்கின்றனர்.

ஆல்ப்ஸ் மலையின் மிக உயரமான முடி, 'மாண்ட் ப்ரவெண்ட்' என்னும் இடத்தி லுள்ளது. மத்திய ஆல்ப்ஸ் பகுதியில் 'மாண்ட் பிளாங்க்' என்னும் முடி. மலை ஏறுபவர்களுக்குச் சவாலை விடுவதுபோல் அமைந்துள்ள மாண்ட் பிளாங்கின் உயரம் 15,781 அடிகள்.

மாண்ட் பிளாங்கைச் சுற்றி 80 மைல் அகலத்துக்கு ஆல்பஸ் மலை விரிந்து கிடக்கிறது. வடக்கே 140 மைல் தொலைவி லுள்ள வெரோனா வரை. இவ்வளவு நீள மான தொடரானாலும், ஆல்ப்ஸ் கடக்க முடியாத மலையல்ல. இடையிடையே ஏராளமான பள்ளத்தாக்குகள், கணவாய்கள் உண்டு.

ஆல்ப்ஸ் மலையில் நிறைய ஏரிகளும் உள்ளன. ஜெனீவா, கான்ஸ்டன்ஸ், கார்டா, லூசர்ன், சூரிச் மாகியோர், கோமா இவை யெல்லாம் பிரபலமான ஏரிகள். மேற்கு

ஐரோப்பாவில் ஓடும் பல முக்கிய நதி களின் பிறப்பிடமும் இந்த ஆல்ப்ஸ் மலைகள்தான். இந்த நதிகள் அருகருகே உற்பத்தியானாலும் இவை சங்கமமாவது வேறு, வேறு கடல்களில்.

ரைன், சோன், டிஸினோ, இன் இந்த நதிகளெல்லாம் கோதார்டு மலையி லிருந்து பத்து மைல் இடைவெளிக்குள் உற்பத்தியாகின்றன. இவை, வட கடல், மத்திய தரைக் கடல், கருங்கடல் இவற்றில் போய் விழுகின்றன. வடக்கேயுள்ள பால்டிக் கடலில் ஆல்ப்ஸ் நதிகள் எதுவும் சங்கமமாகவில்லை. ஆல்ப்ஸ் மலைப் பிராந்தியத்தில் வாழும் மக்கள், விவசாயம் செய்தும், துணி வர்த்தகம் செய்தும், சுற்றுலாத்துறை மூலமும் பிழைக்கின்றனர். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாக் குழுக்கள் மலை ஏறவும், பனிச்சறுக்கல் விளையாடி மகிழவும், வனப்பைக் கண்டு களிக்கவும் ஆல்ப்ஸ் மலையை நோக்கிச் செல்கின்றன.

மாண்ட் பிளாங்கைத் தவிர பல அழகிய மலை முகடுகளைக் கொண்டது ஆல்ப்ஸ். அதில் ஒன்று மாண்ட் ரோஸா.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us