தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/காகமும் கிளியும்!

காகமும் கிளியும்!

காகமும் கிளியும்!


PUBLISHED ON : நவ 13, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 13, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பங்களா முகப்பில் இருந்தது தங்கக் கூண்டு. அதில், அழகான கிளி அடைக்கப்பட்டு இருந்தது. அதற்கு அழகு என்ற கர்வம் மிகுந்திருந்தது.

கூண்டில், தினை, நெல், மிளகாய் பழம் என உணவுகள் இருந்தன; சிறிய கிண்ணத்தில் தண்ணீரும் நிரம்பியிருந்தது; அருகில் அழகிய ஊஞ்சலும் இருந்தது.

அந்த பங்களா அருகில் வேப்பமரத்தில் கூடுகட்டிய காகம், குஞ்சுகளுடன் வாழ்ந்து வந்தது.

அதை எப்போதும் ஏளனமாக பார்த்தது கூண்டுக்குள் இருந்த கிளி.

ஒரு நாள் -

நிறத்தை கூறி கிண்டலாக அழைத்தது கிளி.

திரும்பிய காகத்திடம், 'என்ன பிழைப்பு உன்னுடையது; உன்னை கண்டால் மக்கள் முகத்தை சுளிக்கின்றனர்; கல்லை விட்டு எறிகின்றனர். என்ன அருவெறுப்பான நிறம்; என்னைப் பார்... பச்சை நிறம், சிவந்த மூக்கு; எவ்வளவு அழகாக உள்ளேன்...' என, பெருமை பேசியது கிளி.

பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தது காகம்.

பெருமை பேசுவதை நிறுத்தவில்லை கிளி.

சரியான பாடம் புகட்ட நினைத்த காகம், 'நீ அழகுதான்; மக்கள் உன்னை நேசிக்கின்றனர் என்பதும் உண்மை தான்; அதனால் உனக்கு என்ன பயன்... நீ இருப்பது சிறை தானே; என்னைப் போல், சுதந்திரமாக பறக்க முடியுமா... எனக்கு, மக்கள் மரியாதை செய்கின்றனர்; உணவை, தினமும் எனக்கு வைத்த பின் தான் உண்கின்றனர்...

'முன்னோர் சடங்கில் கூட, எனக்கு உணவு படைத்தபின் தான், பந்தியில் அமர்கின்றனர். நல்ல காற்று, பரந்த ஆகாயம் என, விருப்பம் போல் வாழ்கிறேன். உன் நிலையை பார்; உன் எஜமான் வைத்தால் தான் சாப்பாடு; அழகாக இருந்து, என்ன பயன்... நீ அடிமை... உன்னிடம் பேச நேரம் இல்லை...' என பறந்தது காகம்.

திடீரென்று கூண்டருகே தாவியது பூனை.

பயத்தில் நடுங்கிய கிளி, அடிமை என்பதை உணர்ந்தது.

குழந்தைகளே... அனைவரையும் மதித்து நடக்க வேண்டும்.

எல்.மகாதேவன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us