PUBLISHED ON : நவ 13, 2021

அ நிறம் | அளவு
என் வயது, 75; சிறுவர்மலர் இதழை பல ஆண்டுகளாக படித்து வருகிறேன்.
எனக்கு, மூன்று குழந்தைகள்; ஒவ்வொரு வாரமும், சிறுவர்மலர் இதழ் வரவுக்காக எதிர்பார்த்து காத்திருப்பர். வந்ததும், போட்டி போட்டு, கதை, கட்டுரைகளை படிப்பர்.
இதில் வரும் கருத்துள்ள கட்டுரைகள் பள்ளி மாணவ, மாணவியருக்கு மிகவும் பயன்படுகின்றன. என் பேர குழந்தைகளும் விரும்பி படிக்கின்றனர். மீண்டும் மீண்டும் படித்தாலும், சலிப்பே ஏற்படுவதில்லை.
சிறுவர்மலர் இதழில் வெளியாகும் கட்டுரைகள், கதைகள், சமையல் குறிப்பு போன்றவை, எத்தனை வயதானாலும் திகட்டாமல் உள்ளன. அவை என்றும் எல்லாருக்கும் பலன் தரும்.
- சந்திரலேகா அக்கினி, மதுரை.
தொடர்புக்கு: 83008 25725
