
சென்னை, சைதாப்பேட்டை, மாடல் உயர்நிலைப் பள்ளியில், 1967ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு...
வகுப்பாசிரியை சூடாமணி தான் ஆங்கிலப் பாடமும் நடத்துவார்.
மிகவும் கண்டிப்பானவர்; பாடங்களை மட்டுமின்றி, ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுத்தார்.
எங்கள் வகுப்பின் மீது ஏற்பட்ட அபிமானத்தால், ஒவ்வொரு ஆண்டும், தலைமை ஆசிரியரின் அனுமதியுடன், அவரே வகுப்பாசிரியையாக தொடர்ந்தார். 11ம் வகுப்பில், வேறு ஆசிரியரை நியமித்து விட்டனர்.
மொத்த மாணவர்களும், தலைமை ஆசிரியரை சந்தித்து கேட்டோம்; அவர் சம்மதிக்கவில்லை.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஆசிரியை, 'வகுப்பில் பாடங்களை கவனித்து முன்னேறுங்கள்...' என கடிந்து, நல் அறிவுரைகள் வழங்கினார்.
அதை ஏற்று படித்தேன்; வாழ்வில் உயர்ந்தேன்.
என் வயது, 65; படிக்கும் காலத்தில் அந்த ஆசிரியையின் மேன்மையை முழுமையாக உணரும் மனப்பக்குவத்தை பெற்றிருக்கவில்லை. வாழ்வில் உயர்ந்தபோது, அதற்கு அடித்தளமிட்டவரை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்!
- பா.ராமதாஸ், சென்னை.
தொடர்புக்கு: 94450 13405

