தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அடித்தளம்!

அடித்தளம்!

அடித்தளம்!


PUBLISHED ON : பிப் 19, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர் மாவட்டம், உடுமலை, விசாலாட்சி மேல்நிலைப் பள்ளியில், 1996ல், 12ம் வகுப்பு படித்தபோது, ஆங்கில ஆசிரியையாக இருந்தார், சுகந்தி லதா.

காலாண்டு தேர்வு துவங்கும் முன், 'புக் ஷாப் மெம்மரிஸ்' என்ற கட்டுரையை கற்பித்தவர், 'படிப்பதற்கு கடினமாக இருக்கும்; எனவே தேர்வில் இதை எழுத வேண்டாம்...' என்று அறிவுறுத்தினார்.

அதை ஏற்காமல், மனப்பாடம் செய்து தேர்வில் எழுதியிருந்தேன். தேர்வுத்தாளை திருத்தியவர், 'குறுகிய காலத்தில் படித்து நன்றாக எழுதியிருக்கிறாய்... மனப்பாடம் செய்துள்ள அந்த கட்டுரையை ஒப்பி பார்க்கலாம்...' என சந்தேகத்துடன் கேட்டார்.

சற்றும் தாமதிக்காமல் ஓர் அடி கூட பிசகாமல் ஒப்பித்தேன். மனம் நெகிழ்ந்து பாராட்டினார். அவர் ஊட்டிய உற்சாகம், எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி., என உயர் படிப்புக்கு உந்துதலாக அமைந்தது.

தற்போது, என் வயது, 42; அரசு கல்லுாரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிகிறேன். வாழ்வின் உயர்வுக்கு அடித்தளமாக அமைந்த அந்த சம்பவத்தை நினைத்தவுடன் மகிழ்கிறது மனம்.

- வி.மணிமேகலை, திருப்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us