தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/உலகின் விலை உயர்ந்த படைப்புகள்!

உலகின் விலை உயர்ந்த படைப்புகள்!

உலகின் விலை உயர்ந்த படைப்புகள்!


PUBLISHED ON : நவ 29, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 29, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலக அளவில் மதிப்பு மிக்கதாக கருதப்படும் பொருட்கள் சில உள்ளன. தரம், விலை மற்றும் கவர்ச்சியால் இந்த அந்தஸ்தை பெற்றுள்ளன. அவற்றை பார்க்கலாம்...

'யாட்ச் ஹிஸ்டரி சுப்ரீம்' படகு: இது உலகின் சொகுசு மிக்க படகு. உலகின் விலையுயர்ந்த பொருட்கள் பட்டியலில், முதல் இடத்தில் உள்ளது. இதன் மதிப்பு, 4.8 பில்லியன் டாலர். இந்திய மதிப்பில் 40 ஆயிரம் கோடி ரூபாய். ஐரோப்பிய நாடான இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டூவர்ட் ஹியூஸ் என்பவர், இதை வடிவமைத்தார். கட்டி முடிக்க, மூன்று ஆண்டுகள் ஆனது. உலகிலேயே விலை உயர்ந்த இந்த படகு, மலேசிய தொழிலதிபரிடம் உள்ளது.

'ஆன்டிலியா' வீடு: மும்பையில் அமைந்துள்ள பிரம்மாண்டமான வீடு. ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது. இது 27 அடுக்கு மாடிகளை உடையது. மூன்று ஹெலிபேடுகள், விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைகள், 178 கார்கள் நிறுத்தும் வசதி, 50 இருக்கைகள் உடைய தியேட்டர் உள்ளிட்ட ஏராளமான சொகுசு வசதிகள் உள்ளன. இது, 8.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தையும் தாங்கி நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

'த கார்ட்ஸ் பிளேயர்ஸ்' ஓவியம்: ஐரோப்பிய நாடான பிரான்சை சேர்ந்த புகழ்பெற்ற ஓவிய கலைஞர் பால் செசான். 'த கார்ட்ஸ் பிளேயர்ஸ்' என்ற தலைப்பிடப்பட்ட, சீட்டு விளையாடுவோர் குறித்தது இவரது ஓவியக் கலைப் படைப்பு. தற்போது இந்த ஓவியம், மத்திய கிழக்கு நாடான கத்தார், அல்தானி அரச குடும்பத்திற்கு சொந்தமாக இருக்கிறது. இந்த அரிய ஓவியம், இந்திய பணத்தில் 2,300 கோடி ரூபாய் விலை மதிப்புடையது.

- வி.கவுதம சித்தார்த்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us