PUBLISHED ON : மே 24, 2013

ஒரு அரசாங்கத்தின் அலுவலகங்களைக் கொண்ட மிகப்பரந்த அளவில் உருவாக்கப்பட்ட கட்டடம் பெண்டகனாகத்தான் இருக்கும். பெண்டகன் என்பது ஐந்து பக்கங்களையுடைய ஓர் அமைப்பைக் குறிக்கும். அமெரிக்க அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை அலுவலகங்களை கொண்ட வாஷிங்டனில் உள்ள கட்டடம் ஐந்து பக்கங்களுடைய அமைப்பு. ஆகவே, அதற்குப் பெண்டகன் என்றே பெயரிட்டுள்ளனர்.
இக்கட்டடத்துக்கு 1943ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதியன்று திறப்பு விழா நடைபெற்றது. இதன் கட்டுமானச் செலவு 63 மில்லியன் டாலர்கள். (3,45,83000 பவுன்கள்) வேலை நாட்களில் இக்கட்டடத்தில் 29 ஆயிரம் மக்கள் பணிபுரிகின்றனர். இக்கட்டடத்தின் டெலிபோன் இணைப்பு 44 ஆயிரம். இணைப்புக் கொடுக்கப்பட்டிருப்பதோ 1,60 ஆயிரம் மைல்களுக்கான. 2,57,500 மீட்டர் கேபிள்கள். பெண்டகனில் டெலிபோனைக் கவனிக்கும் ஊழியர்கள் மட்டும் 220 பேர். ஒரு நாளைக்கு உத்தேசமாக 2,80 ஆயிரம் அழைப்புகளை சமாளிக்கின்றனர்.
