தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அழகின் சிரிப்பு!

அழகின் சிரிப்பு!

அழகின் சிரிப்பு!


PUBLISHED ON : ஜன 11, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 11, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடுமையாக உழைத்து, ஒரு தோட்டத்தை உருவாக்கினான் முனியன். அதில், அழகிய மலர்கள் பூத்துக் குலுங்கின. அவற்றை சுற்றி வந்த வித விதமான வண்ணத்துபூச்சிகள், தேனை உண்டு வானில் சிறகடித்தன.

தோட்டத்துக்கு, அன்று புதிதாக, ஒரு வண்ணத்துப்பூச்சி வந்தது. அதைக் கண்ட பூக்கள், 'ஏய்... நீ பல வண்ணங்களுடன் இருக்கிறாய்... உன் இறக்ககைள் படபடக்கின்றன. உன்னுடன் நட்பு கொள்ள விரும்புகிறோம்...' என்றன.

'எதற்காக என்னிடம் நட்பு கொள்ள விரும்புகிறீர்கள்...' என, கேட்டது வண்ணத்துப்பூச்சி.

'இங்கே பறந்து திரியும் பூச்சிகளை விட, நீ வித்தியாசமாக இருக்கிறாய். உன் உடலில் பூசியுள்ள வண்ணக்கலவை இனிமையாக ஈர்க்கிறது. அதனால் தான் நட்பு கொள்ள விரும்புகிறோம்...' என்றன.

'நான் மிகவும் அழகான பூக்களையே தேடுகிறேன்... உங்களுடன் நட்பு கொள்ள விரும்பவில்லை...' என, முகத்தில் அடித்தாற்போல் கூறி சிறகடித்தது வண்ணத்துப்பூச்சி.

இதைக் கேட்டு வருந்திய பூக்கள், 'பறக்க சிறகு இன்றி படைத்து விட்டாரே கடவுள்...' என, புலம்பி அழுதன.

அப்போது, திரும்பி வந்த வண்ணத்துபூச்சி, 'பூக்களே... நீங்கள் கடவுளிடம் அழுது புலம்பியது, என் செவிகளில் விழுந்தது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் அழகு மிக்கவை தான்... இதை உணராமல் ஏன் பிரத்யேக அழகை தேடுகிறீர்கள். பூமியில் பிறந்ததற்காக, நீங்கள் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்...' என்றது.

'நாங்கள் நன்றி சொல்ல மாட்டோம்...' என, ஒரே குரலில் கூறின பூக்கள்.

'இன்னும் சற்று நேரத்தில், தோட்டக்காரன் வருவான்; உங்களைக் கண்டதும், பெரும் மகிழ்ச்சியும், வியப்பும் கொள்வான்...' என்று கூறி சிரித்தது வண்ணத்து பூச்சி.

அமைதியாக குலுங்கிய பூக்கள், 'அப்படியா... தோட்டக்காரன் எதற்காக, எங்களைப் பார்த்து மகிழ்ச்சியடைய வேண்டும்...' என்றன.

'உங்கள் மலர்ச்சியால், தோட்டக்காரன் வாழ்க்கை சிறக்கிறது; பூக்களை பறித்து, சந்தையில் விற்பதால் கிடைக்கும் பணத்தில் குடும்பம் நடத்துகிறான். இனிய வாழ்வை அமைத்துள்ளான்; உங்கள் புன் சிரிப்பு, உலகையே மயமாக்குகிறதே. இறைவன் திருவடிக்கே நீங்கள் தான் அழகு சேர்க்கிறீர்கள்... என்

அன்றாட வாழ்வும் உங்கள் உதவியால் தான் நடக்கிறது...'

'அது எப்படி...' என, பூக்கள் வியந்து கேட்டன.

'நீங்கள் வைத்திருக்கும் சுவையான தேனை உண்டு தானே நான் வாழ்கிறேன்; என் இறக்கைகள் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு தேன் உணவுதான் காரணம். இதோ, இங்கே பறக்கும் வண்டுகளும், தேன் உண்டுதான் வாழ்கின்றன. பிறருக்கு உதவுபவரே, மிகவும் அழகானவர்; தன்னலமற்ற தியாகி. அந்த வகையில், உங்கள் அழகுக்கு ஈடு இணையே இல்லை...' என கூறியது.

இதை கேட்டதும், சிலிர்த்தன பூக்கள்.

உதவும் குணம் தான் அழகு என, புரிய வைத்த வண்ணத்துபூச்சிக்கு நன்றி கூறி, மெல்லிய காற்றில் குலுங்கின.

குழந்தைளே... பூக்களை போல், மற்றவர் மனம் மகிழ உதவி செய்து வாழுங்கள்.

எம்.அசோக்குமார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us