PUBLISHED ON : செப் 20, 2013

வெயில் காலமென்றால் ஏதாவது ஒன்று நம்மை அவஸ்தைப் பட வைக்கும். ஒன்று, வேர்க்குரு; அடுத்தது கொசுக்கடி. முதலாவது அவஸ்தைக்கு குடை, கூலிங் கிளாஸ், சன் ஸ்கிரீன், சந்தனம், இளநீர் என்று ஏதாவது பயன்படுத்திச் சமாளிப் போம். கொசுவை என்ன செய்வது? இப்படி யோசிச்சுக்கிட்டே ஒரு கொசுவை லென்ஸ் வைத்துப் பார்த்தார் ஒரு விஞ்ஞானி. ரத்தம் குடிக்கும் கொசுவிடம் வயிறு புல் ஆயிடுச்சு. நிறுத்து என்ற சிக்னல் தரும் ரசாயனம் ஒன்று அதன் வயிற்றுக்குள்ளே இருப்பதைக் கண்டுபிடித்தார் அவர். அதே ரசாயனம் எந்தப் பொருளில் இருக்கிற தென்று ஆராய்ந்தார். தக்காளியில் அந்த ரசாயனம் இருப்பதைப் பார்த்து துள்ளிக் குதித்தார் அந்த விஞ்ஞானி.
உடனே 100 பேரைக் கூப்பிட்டார். 90 பேருக்கு மட்டும் தக்காளிச் சாற்றை உடம்பில் தடவியும், மீதி 10 பேரை சும்மாவும் தூங்கச் செய்தார். கூர்மையான ஆராய்ச்சியை ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்? தக்காளி தடவாத 10 பேரை கொசுக்கள் கடித்துத் தீர்க்க, தக்காளிச் சாறு தடவித் தூங்கியவர்கள் பக்கம் ஒரு கொசு கூட திரும்பலையாம். உடம்புக்குக் கெடுதல் செய்யும் கெமிக்கல் கலந்த மேட், ரிப்பலென்ட்டுகளை விட தக்காளியை நீங்கள் டெஸ்ட் செய்து பாருங்களேன் தப்பிச்சிடுவீங்க!
