தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பெரிய பிரச்னையா இருக்கு...

பெரிய பிரச்னையா இருக்கு...

பெரிய பிரச்னையா இருக்கு...


PUBLISHED ON : மே 18, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 18, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நான், எட்டாம் வகுப்பு படித்த போது, படிப்பு, விளையாட்டு, வருகை பதிவிலும் முதலிடம்! மற்ற மாணவ, மாணவியருக்கு, என் செயல்பாட்டைத்தான், வகுப்பு ஆசிரியை முன்னுதாரணமாக கூறுவார்.

என்னை பற்றி அடிக்கடி, புகழ்ந்து கூறியதால், சக மாணவ, மாணவியர் எரிச்சலடைவர்; பலர், நம் நன்மைக்குத்தான் ஆசிரியர் உதாரணமாக கூறுகிறார் என்பதை புரிந்து, முன்னேறி நற்பெயர் பெற்றனர். நான் பொறுமையாக இருப்பேன்.

என்னுடன், படித்த அனைவரும் இன்று மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளனர். சிலரை, அடிக்கடி சந்திப்பதுண்டு. அப்போது, 'உன்னை எடுத்துக்காட்டி, ஆசிரியர் கூறும் போது, மனதுக்குள், 'இவ மட்டும் எப்படி தான், நல்ல பேரு வாங்குறாளோ, இவளால, பெரிய பிரச்னையா இருக்கு...' என புலம்பியது உண்டு; ஆனால், இன்று, உன்னை நினைக்கும் போதே பெருமைப்பட்டு கொள்வோம்... உனக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை...' என பாராட்டுவர்.

இந்த பெருமைக்கு காரணம், என் ஆசிரியர்கள் தான். இப்போது நானும், ஆசிரியையாக பணியாற்றுகிறேன். அதனால் பெருமிதம் அடைகிறேன்.

- வே.புஷ்பமாலதி, திண்டுக்கல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us