PUBLISHED ON : டிச 11, 2015

அ நிறம் | அளவு
எலித் தொல்லையால் அவதிப்படாத நாடே இல்லை எனலாம். உலக மக்கள் தொகை எவ்வளவோ அவ்வளவு எலிகள் உலகில் உள்ளன. ஒரு நபருக்கு நாலு எலிகள் என்ற கணக்கில் உள்ளன. எலிகளால் நாம் படும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.
ஆனால், மிக மிக முக்கியமான காரணத்திற்கு எலிகள் பயன்படுகின்றன. எந்த மருந்தையும் கண்டுபிடிப்பதற்கு முன்பும், பின்பும் எலிகளை வைத்தே பரிசோதிக்கின்றனர். எலியின் பல உடல் உறுப்புகள் மனிதனின் உடல் உறுப்புகள் போல் இயங்குவதால், மனித உடலில் பயன்படுத்துவதற்கு முன்னர், இந்த சோதனை எலிகளுக்கு நடத்தப்படுகிறது. எத்தனையோ புதுப்புது மருந்துகள் எலிகள் மூலம் சோதிக்கப்பட்டு அதன்பிறகு மனிதனுக்குப் பயன்படுகின்றன.
