தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தமிழர்கள் திருநாள்!

தமிழர்கள் திருநாள்!

தமிழர்கள் திருநாள்!


PUBLISHED ON : ஜன 15, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 15, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகை, 'புதியீடு' என்று அழைக்கப் பட்டது. அறுவடை முடிந்து புதிய உணவு பொருட்கள் வீட்டிற்குள் நுழைவதை குறிப்பிடும் விதமாக, 'புதியீடு' என்று அழைக்கப்பட்டது.

தமிழர்களின் பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது பொங்கல் பண்டிகை. நான்கு நாட்கள் விழாவாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

புத்தாடையும், கரும்பும்!

பெரும் பொங்கல் அல்லது சூரிய பொங்கல் எனப்படும் இரண்டாம் தினத்தன்று புதிய நெல்லிலிருந்து பெறப்பட்ட புதிய அரிசியில் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் சமைத்து அத்துடன் பலவிதமான காய்கறிகளையும் சமைத்து எல்லாரும் சேர்த்து சாப்பிடுவர். புதிய ஆடை அணிந்து, கரும்பு சாப்பிட்டு பொங்கலை கொண்டாடுவர். வாசலில் பெரிய, பெரிய வண்ண கோலங்களை எங்கும் காண முடியும்.

அன்பும், நன்றியும்!

பெரும் பொங்கலுக்கு அடுத்த நாள் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் மாட்டுப் பொங்கலும், அதற்கு அடுத்த நாள் பெரியவர்களுக்கும், உறவினர்களுக்கும் அன்பையும், நன்றியையும் தெரிவிக்கும் காணும் பொங்கலாகவும் கொண்டாடப் படுகிறது. உழைப்பு முடிந்து அதன் பயனை அனுபவிக்க தயாராகி அத்துடன், அடுத்த வேலைகளுக்கு முன்பாக ஓய்வாகவும் பொங்கல் பண்டிகை அமைகிறது.

உலகப் பொங்கல்!

அறுவடை திருநாள், 'பொங்கல் திருநாள்' என நம்மால் கொண்டாடப்படுகிறது. விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் இயற்கை வளங்களுக்கு நன்றி தெரிவிக்கும் இந்த விழா, உலகம் முழுக்கவே கொண்டாடப்படுகிறது.

யாம் படையல்!

ஆப்பிரிக்காவின் அறுவடை திருநாள், 'யாம் பெஸ்டிவல்' மழைப்பருவம் முடிந்ததும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடக்கும் திருவிழா.

'யாம்' என்பது, நம்ம ஊர் கருணைக் கிழங்குதான். முதல் அறுவடை செய்ததும் கடவுளுக்கும், மூதாதை யர்களுக்கும் படைத்த பிறகுதான், 'யாம்' எனப் படும் இந்த காயை சமைக்கவோ, விற்பனை செய்யவோ வேண்டும் என்பது அந்த மக்களின் வழக்கம்.

அறுவடையும் விதைப்பும்!

மேற்கு ஆப்பிரிக்காவின் 'கானா' நாட்டினர் கொண்டாடும் பிரம்மாண்டமான அறுவடை திருவிழா, 'ஹோமோவா திருவிழா' என்றும், 'முதல் பழங்கள் திருவிழா' என்றும் அழைக்கப்படுகிறது. இது, திராட்சை மற்றும் இதர பழவகைகளை படைக்கும் விழா. முதலில் அறுவடை செய்யும் விவசாய பொருட்களை கடவுளுக்கு படைத்து சாப்பிட்டால், அவை புனிதமாகும் என்பது அவர்களின் நம்பிக்கை. மே மாதத்தில் நடக்கும் இந்த திருவிழாவின் போது, சிறுதானியங்களை விதைப்பதும் நடக்கும்.

வயலிலேயே கொண்டாட்டம்!

இஸ்ரேலியர்களின் வேதப்புத்தகம் 'தோரா'வின்படி ஏகப்பட்ட அறுவடை திருவிழாக் களை அவர்கள் கொண்டாட வேண்டும்.

இவற்றுள் முக்கியமான திருவிழா 'சுக்கோத்' இந்த திருவிழா 7 நாட்க ளுக்கு தொடர்ந்து நடைபெறும். அந்த திருவிழா மத மற்றும் வேளாண்மை சார்ந்த விழாவாக கொண்டாடப் படுகிறது. அறுவடை செய்யும் திராட்சை மற்றும் இதர பழவகைகளை படைப்பர்.

வயல்களிலேயே தங்கி கொண்டாடு வதும், இவர்களுடைய வழக்கம். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இது கொண்டாடப்படும்.

விருந்தில் மிளகாய்!

'க்வான்ஸா' அறுவடை திருவிழா. 'க்வான்ஸா' என்றால் முதலில் அறுவடை செய்த பழங்கள் என்று பொருள். ஆப்பிரிக்க மக்கள் அமெரிக்காவில் குடியேறியபோது, அவர்களுடைய இந்த கலாசார திருவிழாவும் குடியேறியது. 'க்வான்ஸா' திருவிழா டிசம்பர் 26ம் தேதி முதல் ஜனவரி முதல் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய அம்சம், டிசம்பர் 31ம் தேதி நடை பெறும் 'கராமு' என்னும் விருந்து. கருணைக்கிழங்கு, எள், கொல்லார்ட் கிரீன்ஸ் மற்றும் மிளகாய் போன்றவை இந்த விருந்தின் விசேஷ அயிட்டங்கள்.

டிமீட்டர் தேவதையே!

'தெஸ்மோஸ்போரிபா' திருவிழா, கிரேக்கர்களின் பொங்கல் விழா. டிமீட்டர் தானியங்களுக்கான கிரேக்க தேவதை. தெஸ்மோஸ் போரியா திருவிழாவை டிமீட்டர் தேவதையை வேண்டி நடத்துவதால், தானிய உற்பத்தி அதிகரிக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. விதை மக்காச்சோளம், பழங்கள், கேக்குகள், பன்றிக்கறி ஆகியவை டிமீட்டர் தேவதையின் படையல் பொருட்கள்.

வரிசை கட்டும் விழாக்கள்!

இயற்கை வளங் களுக்கு நன்றி சொல்லும் திருவிழா 'ஹார்வெஸ்ட் மூன்!' துனினும, நோவாட்டிக்குவா, சீனோ இ ஈக்குவா, ரைப் கார்ன் பெஸ்டிவெல் போன்ற திருவிழாக்கள் இவர்கள் கொண்டாடும் இதர பொங்கல் விழாக்கள்.

வண்ண பூர்வீக ஆடைகள்!

காடுகளில் உள்ள புதர்கள் மற்றும் மரங்களிலிருந்து சேகரிக்கப்படும் பழங்கள், கொட்டைகள் ஆகியவற்றை இந்த 'பிரெஷ் பீஸ்ட் பெஸ்டிவெல்' திருவிழாவில் படைக்கின்றனர். இந்த திருவிழாவுக்கு பிறகுதான் அவர்கள் தங்கள் வேட்டையை கூட தொடங்குகின்றனர். பூர்வீகக் குடியினர் இந்த விழாக்களின்போது வண்ணமயமான பூர்வீக ஆடைகளை அணிகின்றனர். பல வண்ண மணிகள், பறவைகளின் இறகுகள், உயரமான தலையணிகள் கொண்டு தங்களை அலங்காரம் செய்து கொள்வர்.

தேங்க்ஸ் கிவ்விங்!

'கிரான்பெரி ஹார்வெஸ்ட் பெஸ்டிவெல்' திருவிழாவை மாசாசூசெட்ஸ் பகுதியில் 1949ம்- ஆண்டிலிருந்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த திருவிழாவின் முக்கிய அம்சம், கிரான்பெரி பழங்களை அறுவடை செய்வது. வட அமெரிக்காவிலும், கனடாவிலும், 'தேங்க்ஸ் கிவ்விங் பெஸ்டிவெல்'ன்னு இந்த கிரான்பெரி திருவிழாவை மிக பிரம்மாண்டமாக கொண்டாடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us