தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/டூ இன் ஒன் மினி ஸ்டோரி!

டூ இன் ஒன் மினி ஸ்டோரி!

டூ இன் ஒன் மினி ஸ்டோரி!


PUBLISHED ON : டிச 14, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 14, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நற்செயல்!

சீக்கியர்களின் குருவாக உயர்ந்த குருநானக், சிறுவனாக இருந்த போது, 'கடைத்தெருவில், ஏதாவது நல்ல பொருள் வாங்கி வா...' என்று, பணம் கொடுத்தார் தந்தை.

கடைத்தெருவிற்கு சென்ற குருநானக், பசியால் வாடிய பிச்சைக்காரர்களைக் கண்டார். எலும்பும், தோலுமாக காட்சியளித்தனர். இரக்கம் கொண்ட குருநானக், தந்தை தந்த பணத்தைச் சில்லறையாக மாற்றினார். அங்கிருந்த பிச்சைக்காரர்கள் தட்டில், பகிர்ந்து போட்டு, 'உணவு வாங்கி பசி போக சாப்பிடுங்கள்...' என்றார்.

வீடு திரும்பியவரிடம், 'மகனே... நல்ல பொருள் வாங்கி வரச் சொன்னேனே... எதுவும் கிடைக்கவில்லையா... வெறுங்கையுடன் வந்து இருக்கிறாயே...' என்றார் தந்தை.

'கடைத் தெருவில் பிச்சை எடுத்தவர்களைக் கண்டேன். நீங்கள் தந்த பணத்தைச் சில்லறையாக மாற்றி, அவர்களுக்கு தந்தேன்; அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். என் மனம் அமைதியானது. நீங்கள் தந்த பணத்திற்கு நல்ல பொருளை வாங்கியதாக நம்புகிறேன்...' என்றார் குருநானக்.

'அருளாளனாக விளங்கும் உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன்...' என்று, மகனை அன்புடன் தழுவிக் கொண்டார் தந்தை.

செல்லங்களே... ஏழைகளுக்கு உதவுவது நற்செயல் தான். பிச்சை எடுக்காமல் உழைத்து வாழ வழி செய்வது, அதை விட உயர்ந்த செயல்.

******

துரும்பு!

மதுராந்தகம் காட்டில், விலங்கு, பறவைகளுக்கு இடையே பகை ஏற்பட்டது. வலிமையை நிரூபிக்க போர் செய்ய முடிவு செய்ததால், விலங்குகள், சிங்கராஜா முன் கூடின.

படைத் தளபதி புலியுடன், அணிவகுத்திருந்த விலங்குகளைப் பார்த்தபடியே வந்தது சிங்கம். திடீர் என எரிச்சல் அடைந்த புலி, 'அரசே... கழுதையும், முயலும் வலிமை இல்லாதவை; இவற்றால் போர் களத்தில் எந்த நன்மையும் விளையாது...' என்றது.

சிங்கம் சிரித்தபடியே, 'தளபதியே... கழுதைக்கும், முயலுக்கும் வலிமை இல்லாமல் இருக்கலாம். கழுதையைப் போல, உரத்து குரல் கொடுக்க எந்த விலங்கும் இல்லை... அதன் குரல், ஏக்காளம் ஊதுவது போல இருக்கும்; அதைக் கேட்டாலே ஊக்கம் பிறக்கும்...

'போர்க்களத்தில் கழுதையைக் கத்த வைப்போம்; மற்ற விலங்குகள் ஊக்கம் பெற்று, போர் புரியும். வேகமாக ஓடும் இயல்பு உடையது முயல். போர்ச் செய்திகளை அனுப்ப அதைப் பயன்படுத்தலாம்...' என்றது.

அதன்படி, கழுதை, முயலுக்கு போர் களத்தில் பணி ஒதுக்கப்பட்டது. இரண்டும் சிறப்பாக பணியாற்றியதால், விலங்குகள் வெற்றி பெற்றன.

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதை புலி உணர்ந்தது.

குழந்தைகளே... ஒவ்வொருவரிடமும் தனித்தனி ஆற்றல்கள் உள்ளன. அவற்றை, முறையாக பயன்படுத்தினால் முன்னேறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us