தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஹேப்பி பர்த்டே டு மை செல்ல நாடு!

ஹேப்பி பர்த்டே டு மை செல்ல நாடு!

ஹேப்பி பர்த்டே டு மை செல்ல நாடு!


PUBLISHED ON : ஆக 14, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியா என்கிற தேசம் பிறந்தது ஆகஸ்ட் 15 அன்று தான், என்றால் அது மிகையில்லை.

ஏனெனில், அடிமையான தேசமும், சுயராஜ்ய தேசமும் ஒன்றில்லை அல்லவா!

நாம் நம் பிறந்த நாளை சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ கொண்டாடுகிறோம். தனி மனிதனுக்கே கொண்டாட்டம் என்றால், 120 க்கும் மேலான கோடான கோடி மனிதர் களை ஈன்ற பாரத தாயின் பிறந்தநாளை எப்படி கொண்டாட வேண்டும் சொல்லுங்கள்...

மிக மிக தொன்மையான பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு கொண்டது நம் நாடு. நாமே நம்மை ஆள தகுதி படுத்தி கொள்ள ஆரம்பித்த முதல் நாள் ஆகஸ்ட் 15. நாம் நம் நாட்டிற்கு நிறைய செய்ய வேண்டியுள்ளது. இது மிகப் பெரிய மக்கள்தொகை கொண்ட புண்ணிய நாடு.மேலும் ஏராளமான வளங்கள் கொண்ட நாடு, எண்ணற்ற சான்றோர்கள், ஞானிகள் வழி காட்டிய நாடு... இத்தனை உன்னதமான சரித்திரம் கொண்ட நாடு... உலகினில் மிக உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.

இந்திய விடுதலைப் போரில் வெள்ளை யரை விரட்ட, தீரமுடன் போராடிய முகலாயர் களின் கடைசி வாரிசான டெல்லி பகதூர் ஷாவின் கல்லறை, அவர் மரணடைந்த ரங்கூனில் (பர்மா) உள்ளது.

ஆங்கிலேயர் கொடுமையை எதிர்த்து 31.5.1857ல் சிப்பாய் கலகம் வெடித்தது. அதற்கு காரணம் பகதூர் ஷாவே என்று கருதிய ஆங்கிலேயே அரசு அவரையும், அவருடைய குடும்பத்தினரையும் கைது செய்தது.

பகதூர் ஷாவை சித்ரவதைக்கு உள்ளாக் கும் நோக்கத்துடன் 'ஹட்சன்' என்ற அதிகாரி அவரது இரு மகன்களின் தலைகளையும் துண்டித்து உணவுத் தட்டில் வைத்து, துணி யால் மூடி பகதுர்ஷாவிடம் அனுப்பினான். துணியை விலக்கிய பகதூர்ஷா மகன் களின் தலைகளை கண்டார். அவர் அதிர்ச்சி அடைய வில்லை.

இதுவும் இறைவனுக்கு செய்யும் ஒருவகை பலி என்று மனதை தேற்றிக் கொண்டார்.

பிள்ளைகள்தான் உலகம் என்று வாழும் பெற்றோருக்கு அறுபட்ட பிள்ளைகளின் தலை களை பார்ப்பது என்றால் அது எவ்வளவு கொடுமை? ஆனால், தேசத்தின் விடுதலைக்காக அவ்வளவு பெரிய தியாகங்கள் செய்யப் பட்டது.

குற்றவாளியெனத் தீர்ப்பளித்து பகதூர்ஷாவை கப்பலில் ரங்கூன் சிறைக்கு ஆங்கிலேயே அரசு அனுப்பி வைத்தது.

அப்போது அவர் தனது வலது கையை சால்வைக்குள் மறைத்து வைத்திருந்தார். சால்வையை விலக்கி பார்த்த போது அவர் கையில் இந்திய மண் இருந்தது. ரங்கூன் சிறையில் அடைத்த பிறகு இனி உயிருடன் நாடு திரும்ப முடியாது என்று கருதியே ஒரு பிடி தாய்நாட்டு மண்ணை பகதூர்ஷா எடுத்துச் சென்றார். ஒருபிடி மண் தானே என்று சொல்ல முடியாது. அது தாய் நாட்டு மண். பகதூர் ஷாவிற்கு அந்த மண் தாய் நாட்டை ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தது.1862ல் தனது 92ம் வயதில் மரணமடைந்து அங்கேயே புதைக்கப்பட்டார். அவரது சமாதி மீது அந்த ஒரு பிடி மண் தூவப்பட்டது.

நேதாஜி ரங்கூன் வந்த போது மாவீரன் பகதூர்ஷாவின் கல்லறையை முத்தமிட்டார்.

அதில் ஒரு பிடி மண்ணையும் எடுத்தார். அதை தன்னுடைய உடைவாளின் கைப்பிடிக்குள் வைத்து வாழ் நாளெல்லாம் பாதுகாத்து போற்றி வந்தார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே - நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

ஜெய்ஹிந்த்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us