தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பெருமை சொல்லும் புராதனம்!

பெருமை சொல்லும் புராதனம்!

பெருமை சொல்லும் புராதனம்!


PUBLISHED ON : ஆக 14, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் தேசத்தின் பாரம்பரியம் மறக்கக் கூடிய தல்ல. அது நமக்கு பெருமை தரக்கூடியது. நம்மை உலக அரங்கில் தலை நிமிர்ந்து கர்வப் பட வைப்பது. ரூபாய் நோட்டுகளில் இந்தியாவில் உலக புராதன சின்னங்களாக ஹம்பி, கல் தேர், டெல்லி செங்கோட்டை, ஒடிசா கோனார்க் சூரிய கோவில், தாஜ்மஹால், கோவா தேவாலயம், அஜந்தா ஓவியங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம் ஹொஸ்பேட்டில், உலக புராதன சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஹம்பி, கல் தேர் ஆகியவை ரிசர்வ் வங்கி அச்சிட உள்ள 10 ரூபாய் நோட்டில் இடம்பெற உள்ளது.

உலகின் எட்டு புராதன சின்னங்களில் ஒன்று ஹம்பி நகர கல் தேர். இந்த தேர் இந்திய தொல்பொருள் துறையால் பாது காக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, 20 ரூபாய் நோட்டில், டெல்லி செங்கோட்டையும், 50 ரூபாய் நோட்டில் ஒடிசா கோனார்க் சூரிய கோவிலும், 100 ரூபாய் நோட்டில் தாஜ்மஹாலும், 500 ரூபாய் நோட்டில் கோவா தேவாலயமும், 1000 ரூபாய் நோட்டில் அஜந்தா குகை ஓவியங்களும் இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us