
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
முடக்கத்தான் கீரை - 1 கட்டு
துவரம் பருப்பு - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
சோம்பு, மிளகு, பட்டை - சிறிதளவு
மஞ்சள் துாள், எண்ணெய், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
சுத்தம் செய்த முடக்கத்தான் கீரையை, எண்ணெயில் வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில், வேக வைத்த துவரம் பருப்பை, மசித்து சேர்க்கவும். வறுத்த சோம்பு, மிளகு, பட்டை, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் துாள் அதில் போட்டு, நன்றாக கொதித்த பின் இறக்கவும். சுவைமிக்க, 'முடக்கத்தான் சூப்' தயார்!
கால்சியம், இரும்புச்சத்துகள் நிறைந்தது. உடலில் எலும்பு தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கும்.
- எம்.ஆர்.ஐஸ்வர்யா, சிவகங்கை.
தொடர்புக்கு: 97518 20761

