PUBLISHED ON : ஜூலை 09, 2022

என் வயது, 67; சென்னை துறைமுகத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்து, ஓய்வு பெற்றேன். என் அப்பாவை, 'சிறுவர்மலர் தாத்தா' என்றே அக்கம் பக்கத்தினர் அழைப்பர். சிறுவர்மலர் வாசிப்பதில் அவ்வளவு ஈடுபாடு கொண்டவர்.
என் இரண்டு வயது பேத்தி, 90 வயது தாய் என, குடும்பமே சிறுவர்மலர் இதழின் ரசிகர்கள். சனிக்கிழமையை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருப்போம்!
இதழ் வந்ததும் பரிசு போட்டி புதிருக்கு விடை தேடுவாள் முதல் பேத்தி. அறிவுபூர்வமான கேள்விகளுக்கு, விடை அளித்து, பாட்டியிடம் சரி பார்த்து கொள்வாள்.
இரண்டாம் பேத்தி, 'உங்கள் பக்கம்!' பகுதியைப் பார்த்து, நன்கு சித்திரம் வரைகிறாள். கடைசி பேத்தி, அட்டைப் படம் மற்றும் குட்டி குட்டி மலர்கள் ரசிகையாகி, 'தாத்தா என் போட்டோ எப்ப இந்த பகுதியில் வரும்...' என, கேட்டபடியே இருப்பாள்.
என் மனைவி, 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்!' பகுதியை படித்தவுடன் அந்த உணவை செய்து, சுவைக்க கொடுப்பார். சிறுவர்மலர் இதழ், அட்டை டூ அட்டை பயனுள்ள பக்கங்களாக உள்ளன. பொது அறிவு வளர்ச்சிக்கு உதவும் தகவல் களஞ்சியமாக உள்ளது. இந்த பணி, மேலும் வளர வாழ்த்துகிறேன்!
- ஜி.வெங்கட்டராமன், சென்னை.
தொடர்புக்கு: 97907 31241

