தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/"டூ இன் ஒன்'' - உண்மை நிகழ்ச்சி - பகுதி (1)

"டூ இன் ஒன்'' - உண்மை நிகழ்ச்சி - பகுதி (1)

"டூ இன் ஒன்'' - உண்மை நிகழ்ச்சி - பகுதி (1)


PUBLISHED ON : அக் 15, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 15, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பேரரசன் அலெக்சாண்டர் - சிற்றரசன் புரு÷ஷாத்தமனை சிரமத்தின் பேரில் வென்றான்.

புரு÷ஷாத்தமனது வீரத்தைப் பாராட்டிய அலெக்சாண்டர், ''உன்னை எவ்விதம் நடத்த வேண்டும்?'' என்று கேட்டான்.

''என்னை ஒரு அரசனைப் போன்று நடத்த வேண்டும்,'' என்று துணிந்து பதில் சொன்னான் புரு÷ஷாத்தமன்.

அவனது துணிச்சலையும், வீரத்தையும் கண்டு வியப்புற்ற அலெக்சாண்டர் தான் போரில் பிடித்த அவனது நாட்டை புரு÷ஷாத்தமன் வசம் ஒப்படைத்ததோடு மீண்டும் அந்நாட்டிற்கே அரசனாக்கினான்.

அதுபோல, நம் நாட்டை அடிமைப்படுத்திய ஆங்கிலேயே அரசின் கடைசி வைஸ்ராயாயிருந்த மவுண்ட்பேட்டன் பிரபு நம் நாட்டிற்கு வந்தபோது இரும்பு மனிதர் என்று சொல்லப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலை சந்திக்க நேரிட்டது.

அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழும் பட்டேல் கர்ஜிக்கும் சிங்கம் போன்ற கம்பீரத் தோற்றத்தில் ரோம் ராஜ்ஜியத்தின் செனட்டரைப் போல கால் மேல் கால் போட்டு அன்றைய தினசரித் தாள்களான முப்பதையும் ஒரே மூச்சில் படித்துக் கொண்டிருப்பார்.

தனக்கு முன்னே கொஞ்சம் கூட மரியாதையில்லாமல் கால் மேல் கால் போட்டு படிப்பதைப் பிடிக்காத வைஸ்ராய், ''மிஸ்டர் படேல்! நீங்கள் எங்களுக்கு அடிமை என்பதை மறந்து விடாதீர்? அடிமையாயிருக்கும் நீங்கள் எனக்கு எதிரே கால் மேல் கால் போட்டு அமர்வது சரியா?''

''மனிதனுக்கு மனிதன் யாரும் அடிமையில்லை. இதுவுமில்லாமல் நீங்கள் வியாபாரத்தின் பேரில் எங்கள் நாட்டில் கொள்ளையடிக்க வந்தவர்கள். கொள்ளையரிடம் நாங்கள் எதற்கு அடிமையாக வேண்டும். யு டோண்ட் அண்டர்ஸ்டாண்ட் மிஸ்டர் மவுண்ட்பேட்டன்!''

இவ்விதம் துணிச்சலுடன் பேசிய பட்டேலின் மீது அதிகாரத்தைச் செலுத்தாமல் அன்பு செலுத்தத் தொடங்கினார் வைஸ்ராய்.

அதன்பிறகு ஒருவரை ஒருவர் புரிந்து இருவரும் நண்பர்கள் ஆனார்கள். படேலின் துணிவையும், செயலையும் மவுண்ட்பேட்டன் பிரபு பாராட்டினார். அன்பு நிறைந்த இன்சொல் இரும்புக் கதவைக் கூட திறக்கும் என்பதற்கு வல்லபாய் பட்டேலின் வாழ்வில் ஏற்பட்ட சுவையான நிகழ்வு ஒரு காரணமாகும்.

குள்ளமான உருவமும் மெலிந்த உடலும் கொண்ட லால்பகதூர் சாஸ்திரியும், உயரமான உருவமும், பருமனான உடலும் கொண்ட கோவிந்த் வல்லப பந்த்தும் ஒருசமயம் காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது கார் விபத்துக்குள்ளானது. பந்த்தும், சாஸ்திரியும் காருக்கு வெளியே தூக்கி எறியப்பட்டனர். சாஸ்திரி பந்த்தின் மீது விழுந்தார். செய்தியறிந்த பிரதமர் நேருஜி பதறியடித்துக் கொண்டு விபத்து நடந்த இடத்திற்கு வந்தார். சாஸ்திரி மேலே எழுவதற்கும் நேருஜி வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது.

''சாஸ்திரிஜி... என்ன பயங்கர விபத்தா? உங்க கை கால் உடம்புக்கு ஏதும் அடியா?'' என்று கவலையுடன் கேட்டார்.

''பண்டிட்ஜி, விபத்து ஒன்றும் அவ்வளவு பயங்கரமானது என்று சொல்வதற்கில்லை... இது ஒரு லேசான விபத்து தான்,'' என்று சாஸ்திரி சிரித்துக் கொண்டே சொன்னார்.

''காரின் முன்பகுதி நொறுங்கியுள்ளது. காருக்கு அப்பால் இரண்டு பேரும் தூக்கி எறியப்பட்டிருக்கிறீர்கள்... அப்படியிருந்தும் லேசான விபத்துத்தான் என்று சொல்கிறீரே!'' ஒன்றும் புரியாமல் நேருஜி கேட்டார்.

''பண்டிட்ஜி... இப்போது நடந்த விபத்தில் நான் கோவிந்த் வல்லப பந்த் மீது தூக்கி எறியப்பட்டதனால் லேசான விபத்தாச்சு... அப்படியில்லாமல் வல்லப பந்த் என் மேலே விழுந்திருந்தால் பயங்கரமான விபத்தாக மாறியிருக்கும்,'' என்றார்.

சாஸ்திரியும், வல்லப பந்தும், நேருஜியும் விபத்து என்ற துன்பத்தையும் மறந்து விழுந்து விழுந்து சிரித்தனர்.                         ***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us