தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/டூ இன் ஒன்!

டூ இன் ஒன்!

டூ இன் ஒன்!


PUBLISHED ON : ஏப் 18, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 18, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. இரவல்

ஒரு வீட்டில் ஒரு பெண் நாய் கடித்து இறந்துவிட்டாள். அவளின் சடலம் வீட்டின் முன்பாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. பக்கத்திலேயே அந்த நாயைக் கட்டி வைத்திருந்தனர்.

அஞ்சலி செலுத்திட பல்லாயிரம் பேர்கள் கையில் மாலையுடன் நீண்ட வரிசையில் நின்றனர். அவ்வளவு கூட்டம். அந்த வழியே வந்த ஒருவருக்கு மிகவும் ஆச்சரியமாய்ப் போய்விட்டது. இந்தத் தெருவில் இவ்வளவு பேர்கள் மாலையுடன் அஞ்சலி செலுத்திட மரணம் அடைந்த முக்கிய நபர் யார் என்று அறிந்து கொள்ளும் ஆவலில் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு வீட்டின் முன்புறம் வந்தார்.

அங்கே இறந்து கிடந்த பெண்ணின் பக்கத்தில் அவரது கணவர் அமர்ந்திருந்தார்.

பார்க்க வந்தவர், ''நடந்தது நடந்துபோச்சு... கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் கூறிவிட்டு மரணம் எப்படி நடந்தது?'' என்று விசாரித்தார்.

அவர் பக்கத்தில் இருந்த நாயைக் காட்டி, ''இதோ இந்த நாய்கடித்துத்தான் என் மனைவி இறந்தாள்,'' என்றார்.

''ஐயா உங்கள் நாயை ஒரு நாளைக்கு எனக்கு இரவல் தர முடியுமா?'' என்று கேட்டார் வந்தவர்.

''போய் வரிசையில் நில்லுங்கள். ஒவ்வொருவருக்கும் கொஞ்ச நேரம் தருகிறோம். பலபேர் நாயைக்கேட்டு வரிசையில் நிற்கின்றனர்,'' என்றார் மனைவியை இழந்தவர்.

''கையில் மாலையுடன் நிற்பவர் அஞ்சலி செலுத்திட வரவில்லையா?'' என்று வந்தவர் சந்தேகத்துடன் கேட்டார்.

''மாலையிட்டு மரியாதை செலுத்திடத்தான்... ஆனால், மாலை இந்த நாய்க்குத்தான்,'' என்றார் அவர்.

02. இரண்டு பெண்டாட்டி!

ஒருநாட்டில் ஒரு அரசர் இருந்தார். அவர் நீதி தவறாதவர். மிகவும் கண்டிப் பானவர். சிறிய குற்றம் என்றால் கூட மிகப்பெரிய தண்டனை வழங்குவார். அதுவும் திருட்டு என்றால் ஏற்றுக் கொள்ளவே மாட்டார். சிறு திருட்டு என்றாலும் மரண தண்டனை விதித்து விடுவார்.

ஒருநாள் ஒரு திருடன் அரண்மனைக்குள் நுழைந்து திருட முற்பட்டான். அரசரே நேரில் பார்த்து கையும் களவுமாக அவனைப் பிடித்து விட்டார்.

மறுநாள் அரசவையில் விசாரணை நடந்தது. குற்றவாளி திருட வந்தது உண்மை என்பதை ஒப்புக் கொண்டான்.

வழக்கம் போல் அரசர், ''உனக்கு மரண தண்டனை விதிக்கிறேன்,'' என்று தீர்ப்புச் சொல்லிவிட்டு தளபதியைப் பார்த்து, ''இவனை நடுத் தெருவில் நிறுத்தி தலையைத் தனியாகச் சீவி விடுங்கள்,'' என்று கட்டளையிட்டார்.

''அரசே!'' குற்றவாளி தயங்கினான்.

''சொல்,'' என்றார் அரசர்.

''அரசே! எனக்கு இரண்டு பொண்டாட்டிங்க... பதினாறு புள்ளைங்க. நான் போயிட்டா குடும்பம் ரொம்பக் கஷ்டப்படும். கொஞ்சம் கருணை காட்டுங்க அரசே!'' என்றான் திருடன்.

உடனே அரசர் கொஞ்சம் கூட யோசிக்காது அவனை விடுதலை செய்திட உத்தரவு பிறப்பித்தார். குற்றவாளி அரசனை வணங்கி வெளியில் சென்றதும், ஆச்சரியம் தாங்காத மூத்த அமைச்சர்.

''அரசே! ஏன் இப்படிச் செய்தீர்கள்?'' என்று கேட்க.

''இரண்டு மனைவி பதினாறு குழந்தைகளுடன் இவன் வாழ்வதுதான் இவன் செய்த குற்றத்திற்குச் சரியான தண்டனை. மரண தண்டனை சிறிது நேரத்தில் முடிந்துவிடும். அவன் ஆயுள் முழுவதும் கஷ்டப்படட்டும்,'' என்று கூறிச் சிரித்தார் அரசர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us