தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மூடுபனி வருவதற்கு என்ன "மூடு' வேண்டும்?

மூடுபனி வருவதற்கு என்ன "மூடு' வேண்டும்?

மூடுபனி வருவதற்கு என்ன "மூடு' வேண்டும்?


PUBLISHED ON : ஏப் 18, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 18, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூடுபனி என்பது நிஜத்தில் நிலத்தின் அருகே உருவாகும் மேகமாகும். வெது வெதுப்பான ஈரமான காற்று ஆகியவை குளிர்ந்த காற்றுடன் கலக்கும்போது மூடுபனி உருவா கிறது. காற்று எந்த அளவுக்கு நீராவியை கொண்டு இருக்க வேண்டும் என்பதை தட்ப வெட்பநிலை தீர்மானிக்கிறது.

காற்று எவ்வளவு குளுமையாக இருக்கிறதோ அவ்வளவு குறைவாக நீராவியை சுமக்கும். காற்று குறிப் பிட்ட தட்ப வெட்ப நிலையில் அது சுமக்கும் நீராவியின் அளவை விட அதிகமான நீராவியை சுமக்கும் போது அது மூடுபனியாக மாறுகிறது.

தட்ப வெட்ப நிலை தேவையான அளவு குறைவாக இருக்கும்போது, மூடுபனி என்பது சற்றே உஷ்ண மான காற்றிலும் கூட உருவாகும். மூடுபனி என்பது புழுதி அல்லது பிற பொருட்கள் நிறைந்த காற்றில் எளிதில் உருவாகும். அது போன்ற பொருட்களில் அவை சேர்ந்து கொள்ளும். தட்ப வெட்ப நிலை 16 டிகிரி செல்ஷியஸ் கீழ் இறங்கும் போலார் பகுதிகளில் ஐஸ் படிவங்களுடன் மூடுபனி உருவாகும்.

பிரகாச மூடுபனி உருவாகிறது!: பகலில் பெற்ற உஷ்ணத்தை, இரவு நேரத்தில் நிலம் வெளியிடும். இதனால், நிலத்தின் அருகில் உள்ள காற்று குளுமை அடைய தொடங்கும். அது தேவையான குளுமை அடைந்த உடன், காற்றில் உள்ள நீராவி மேலும் சுருக்கமாகி பிரகாசமான மூடுபனியாகிறது. இது போன்ற மூடுபனி கடல் மட்டத்தை விட குறைந்த உயரம் கொண்டு நிலப்பகுதிகளில், தெளிவான ஏறக்குறைய காற்றே இல்லாத இரவுகளில் அடிக்கடி உருவாக காணலாம்.

மூடு கூட்டம் கூடுவது எப்படி?: மூடு கூட்டம், கடலின் அருகே தான் எப்பவும் காணப்படும். ஒரு ஈரமான பகுதி அங்கே உருவாக, வெது வெதுப்பான காற்று உடனே குளிர் பகுதிக்கு நகரும். காற்றின் அப்பகுதி குளிர்கிறது. இதனால், நீராவி உருவாகி சுருக்க மடைந்து மூடுபனி தோற்றம் தெரிகிறது.

வழுக்கி போகும் மூடுபனி: மலை மேலே, வெதுவெதுப்பான மற்றும் ஈரமான காற்று கீழிருந்து மேலேருகிறது. அது பின் விரிவடைந்து குளிரடைகிறது. இதன்மூலம் காற்றில் உள்ள நீராவியை குளிரடைய செய்து மூடுபனி உருவாக செய்கிறது. இந்த மேலேறும் மூடுபனி, ஏறுக்குமாறான வடிவங்களில் உருவானாலும், பெரும்பாலும் மலை ஏறுபவர்களால் சிதைக்கப்படுகிறது. காற்றின் மின்னோட்டம் மேல் நோக்கி நகர்வது தொடர்ந்தால் இந்த மேலேரும் மூடுபனி மேகங்களாய் உருவாகும்.



நீராவி மூடுபனி:
சில சமயம் குளிர் காற்று, நதிகள் மற்றும் குட்டைகள் இரவில் உஷ்ணத்தை மறுபடியும் தக்க வைத்து கொள்ளும்போது, அதன் மேல் வீசும். அந்த குளிர் காற்று வெதுவெதுப்பான நீராவியை குளிர செய்து சுருக்கமாக்கி மூடுபனி ஏற்படுகிறது. காற்று மற்றும் தண்ணீர் இடையே உள்ள அதிகப் படியான தட்பவெட்ப நிலை இடை வெளியை பொறுத்து மூடுபனியின் தடிமன் இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us