PUBLISHED ON : பிப் 19, 2022

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
கறுப்பு உளுந்து - 50 கிராம்
சாமை - 50 கிராம்
பூண்டு - 1
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
தேங்காய் துருவல், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
கறுப்பு உளுந்தை உடைத்து, நன்றாக வறுக்கவும். இதனுடன், மூன்று கப் தண்ணீர் ஊற்றி, சாமை, உப்பு, நல்லெண்ணெயில் வதக்கிய பூண்டு சேர்த்து வேக வைக்கவும். நன்றாக வெந்த பின் இறக்கி, இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய், துருவிய தேங்காய் சேர்த்து கிளறவும். சுவையான, 'உளுந்து சாமை சாதம்!' தயார்.
சத்துகள் நிறைந்தது. அனைத்து வயதினரும் சாப்பிட ஏற்றது.
- ம.நிர்மலா, புதுச்சேரி.
தொடர்புக்கு: 87784 67173
