PUBLISHED ON : பிப் 19, 2022

என் வயது, 50; அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறேன். சிறுவர்மலர் இதழை, 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாசித்து வருகிறேன். அது, என்னை எழுத்தாளனாக மாற்றியுள்ளது. பிடித்த படக்கதைகளை, தொகுத்து புத்தகமாக்கியுள்ளேன்.
அவற்றை மாணவ, மாணவியரின் ஓய்வு நேரத்தில் வாசிக்க கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். தற்போது பணிபுரியும் பள்ளியில், வாசிப்பு பலகை அமைத்து, அதில், சிறுவர்மலர் இதழ்களை தொங்க விட்டு படிக்க வசதி செய்துள்ளேன். இது, மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்துகிறது.
கற்பித்தலுக்கு, சிறுவர்மலர் இதழ் சிறந்த உபகரணமாக பயன்படுகிறது.
சிறந்த ஆசிரியருக்காக, 'தினமலர்' நாளிதழ் வழங்கிய, லட்சிய ஆசிரியர் விருது பெற்றுள்ளேன். நல்ல ஆசிரியராக என்னை மாற்றியதில், சிறுவர்மலர் இதழுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை, எப்போதும் நினைவில் கொண்டுள்ளேன்.
- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், ராமநாதபுரம்.
தொடர்புக்கு: 94420 55358
