PUBLISHED ON : ஜூன் 01, 2018

நான், ஐந்தாம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு இது! என் வகுப்பு ஆங்கில ஆசிரியர், மிகவும் கண்டிப்பானவர். ஒரு நாள், பாடம் நடத்தி கொண்டிருந்தபோது, மாதவன் என்ற மாணவன், வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். 'என்னடா வேடிக்கை...' என்றார் ஆசிரியர்.
'சார்... எனக்கு ஆங்கில பாடம் சரியா வராது...' என்றான்.
'சரி... நாளைக்கு, ஏ,பி,சி,டி., 100 முறை எழுதிட்டு வா... கூடவே, உங்க அப்பா, அம்மாவையும் கூட்டிட்டு வா...' என்றார்.
மறுநாள், அவன் மட்டும், தனியாக வந்தான்; எழுதிய நோட்டை, ஆசிரியரிடம் காட்டினான்.
அதில், 'ஏ,பி,சி,டி., 100 முறை எழுதி வரவும்...' என்று எழுதியிருந்தான்.
ஆசிரியர் மிகவும் கோபத்துடன், 'எங்கடா, உங்க, அப்பா, அம்மா...' என்று கேட்டார்.
'சார்... அவங்களுக்கு, 'யூனிபார்ம்' இல்லையே...' என்று ஒரு போடு போட்டான். இதை கேட்ட ஆசிரியர், வாய்விட்டு சிரித்தார். நாங்களும் அவருடன் சிரிப்பில் மூழ்கி விட்டோம்!
- மா.விஜயகுமார், திருத்தணி.
