தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அவசரம் இது அவசியம்!

அவசரம் இது அவசியம்!

அவசரம் இது அவசியம்!


PUBLISHED ON : அக் 15, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 15, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அருகே, அகரக்கடம்பனுார் அரசு துவக்க பள்ளியில்,1955ல், 4ம் வகுப்பு படித்தேன். அப்போது, ராட்டையில், நுால் நுாற்கும் வகுப்பு ஒன்று உண்டு. அதில், அன்று நுால் நுாற்றபடி இருந்தேன். அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டி இருந்தது. ஒரு விரலை காட்டி, ஆசிரியரிடம் அனுமதி கேட்டேன். மறுத்து விட்டார்.

சிறிது நேரத்திற்குப் பின் -

நான், நுால் நுாற்பதை பார்க்க வந்தார் ஆசிரியர். அறை முழுதும் நனைந்திருந்தது. சிறுநீரை அடக்க முடியாமல், இருந்த இடத்திலேயே விட்டு விட்டேன். இதற்காக, என்னை திட்டவோ, தண்டிக்கவோ இல்லை அந்த ஆசிரியர். தகவலை, தலைமை ஆசிரியர் வெங்கட்ராமன் கவனத்துக்கு உடனடியாக கொண்டு சென்றார்.

மறுநாளே, 'மாணவர்கள் அவசரமாக, சிறுநீர் கழிக்க வேண்டி வந்தால், ஆசிரியரிடம் அனுமதி பெற வேண்டியதில்லை...' என உத்தரவு போட்டார் தலைமை ஆசிரியர். நன்றாக படிக்கும் மாணவன் என்பதால், வகுப்பில் எனக்கு இரட்டிப்பு பிரமோஷன் கிடைத்தது. தொடர்ந்து சிறப்பாக படித்து, மருத்துவரானேன்.

இப்போது, என் வயது, 75; கடலுார் அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பள்ளியில் நடந்த நிகழ்வு என் நினைவிலும், உணர்விலும் கலந்திருக்கிறது.

- ஏ.கிருஷ்ணமூர்த்தி, கடலுார்.

தொடர்புக்கு: 98431 20139


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us