தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பயனுள்ள பாடம்!

பயனுள்ள பாடம்!

பயனுள்ள பாடம்!


PUBLISHED ON : பிப் 26, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 26, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி மாவட்டம், பெரியகுளம், விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1978ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தேன். ஆங்கில ஆசிரியர் எஸ்.கே.அய்யாசாமி மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்திவந்தார். அதில் சேர்ந்திருந்தேன்.

ஆங்கில இலக்கணத்தில், 'சிம்பிள் பாஸ்ட்' மற்றும் 'பாஸ்ட் பெர்பெக்ட்' இடையேயான வேறுபாட்டை விளக்கிக் கொண்டிருந்தார். குறும்புக்கார மாணவன் ஒருவன் எங்களுக்கு முன் அமர்ந்திருந்த மாணவியர் மீது, சாக்பீஸ் துண்டுகளை வீசி தொல்லை கொடுத்தபடி இருந்தான்.

அதை கவனித்தவர், அவனை பிரம்பால் வெளுத்தபடி மீண்டும் பாடத்தை தொடர்ந்தார். வகுப்பில் நடந்த சம்பவத்தையே உதாரணமாகக் காட்டி, இலக்கண விதிகளை புரிய வைத்தார். அதாவது, மாணவன் சாக்பீஸ் எறிந்தது, முதல் சம்பவம்; அது நடந்து முடிந்துவிட்டதால், 'பாஸ்ட் டென்ஸ்' என்ற இறந்த காலம் எனக் கூறினார். பிரம்பால் ஆசிரியர் விளாசியது அதோடு சம்பந்தபட்ட மற்றொரு சம்பவம். அது, 'பாஸ்ட் பெர்பெக்ட்' என நுட்பமாக விளக்கி புரியவைத்தார்.

இப்படிக் கற்பித்தவை தான், கல்லுாரி படிப்பு, அலுவலக பணி மற்றும் அன்றாட வாழ்க்கையில் உபயோகமாக உள்ளது. தற்போது, என் வயது, 59; அன்றாடம் பயன்படுத்தும் விதமாக, மொழியை கற்றுக்கொடுத்த அந்த ஆசிரியரை மனம் உவந்து வணங்குகிறேன்.

- ஆர்.பிரேம் சுதாகர், தேனி.

தொடர்புக்கு: 94863 01873

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us