தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பெயர் குழப்பம்!

பெயர் குழப்பம்!

பெயர் குழப்பம்!


PUBLISHED ON : பிப் 26, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 26, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தென்காசி மாவட்டம், சுப்புலாபுரம், செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியில், 19௯5ல், 10ம் வகுப்பு படித்தபோது, தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார் பெருமாள்சாமி. ஒருநாள், திருத்திய கணக்கு பாட விடைத்தாளை வினியோகித்துக் கொண்டிருந்தார். என் பெயரை, நான்கு வகையாக உச்சரித்து கிண்டலாக அழைத்தார். ஒன்றும் புரியாமல் அருகில் சென்றேன்.

மிக நிதானமாக, 'கடந்த நான்கு மாதங்களாக உன் விடைத்தாள்களை கவனித்து வருகிறேன்; அவற்றில் உன் பெயரை, பலவாறாக எழுதியிருக்கிறாய். இதுபோல் தொடர்ந்தால், பின்னாளில் பெரும் பாதிப்பு ஏற்படும்...' என கடிந்தார். ஒரே மாதிரி எழுத கண்டிப்புடன் அறிவுரைத்தார்.

ஆவணங்களில் பெயர் மாறியிருந்ததால் பின்னாளில் அவர் எச்சரித்தது போல் அவதியை தந்தது. கல்வி சான்றிதழ்களில் ஒரு மாதிரியும் குடும்ப அட்டையில் மற்றொரு விதமாகவும் பதிவாகியிருந்தது. அதை, சரி செய்வதற்கு மிகுந்த சிரமப்பட்டேன்.

என் வயது, 42; அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறேன். பெயரை கண்டபடி கூறுவோரை காணும் போது, அந்த ஆசிரியர் கண்டிப்புடன் கூறிய அறிவுரையை எண்ணிக் கொள்கிறேன்.

- நா.ஜெய்கணேஷ், தென்காசி.

தொடர்புக்கு: 90253 08060


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us