தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வாகன பொம்மைகள்!

வாகன பொம்மைகள்!

வாகன பொம்மைகள்!


PUBLISHED ON : மே 30, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 30, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாகன வடிவ பொம்மைகள் மீது, குழந்தைகளுக்கு, தனி ஆர்வம் உண்டு. பெற்றோரும் வாங்கி தந்து ஊக்குவிக்கின்றனர். இவை, தொகுப்பாகவும் விற்பனைக்கு கிடைக்கின்றன.

தொலைகாட்சி குழந்தை தொடர்களில், நுாதன வடிவத்தில் வாகன பொம்மைகள் வருகின்றன. அவற்றை பார்க்கும் குழந்தைகள் ஆர்வம் மிகுதியால் வாங்க விரும்புகின்றனர். உலகம் முழுவதும் இது நடக்கிறது.

பொம்மை வாங்க ஆர்வப்படும் குழந்தைகள் ஒருபுறம் என்றால், பொழுது போக்காக, வாகன பொம்மை சேகரிப்போரும் உலகம் முழுவதும் உள்ளனர். இதனால், வாகன பொம்மை விற்பனை அமோகமாக நடக்கிறது.

பெங்களூரைச் சேர்ந்த சுமித் என்பவரிடம், 600க்கும் அதிகமான வாகன பொம்மைகள் உள்ளன. அவை, பல அளவுகள் கொண்டவை; ஒவ்வொன்றும், 3,000 முதல் 6,000 ரூபாய் வரை விலையுள்ளவை.

இவர் மாதத்துக்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை, வாகன பொம்மை வாங்க செலவிடுவதாக கூறுகிறார். கேட்டால், 'குழந்தை பருவத்தில் ஏற்பட்ட பொழுதுபோக்கை, கைவிட முடியவில்லை...' என்கிறார்.

குழந்தைகளுக்கான வாகன பொம்மைகள், அசல் வாகனங்கள் போல் உருவாக்கப்படுகின்றன. அளவில் குறிப்பிட்ட விகிதாச்சாரம் கடைபிடிக்கப்படுகிறது. புழக்கத்தில் உள்ள வாகன மாதிரிகளில், 1:87 மற்றும் 1:12 போன்ற விகித அளவுகளில் உருவாக்கப்படுகின்றன.

ஐரோப்பிய நாடான ஜெர்மனி, ஆசிய நாடான ஜப்பானில் தான், இது போன்ற பொம்மைகள் அதிகம் தயாராகின்றன. உலகம் முழுவதும் கடைகளில் கிடைக்கின்றன.

சிலருக்கு பந்தய கார் பொம்மைகள் மீது விருப்பம். பிரபலங்கள் பயன்படுத்தும், சொகுசு கார் போன்ற பொம்மைகளை சிலர் சேகரிப்பர். விமானம், ரயில், டிராக்டர் போன்ற வாகன உருவ பொம்மைகள் சேகரிப்பர் சிலர்.

வாகன பொம்மை தயாரிப்பில், ஹாட் வீல்ஸ், மேட்ச் பாக்ஸ் மற்றும் க்ரீன் லைட் போன்ற நிறுவனங்கள் புகழ்பெற்றுள்ளன. இந்த நிறுவன தயாரிப்புகள் தரமானவை என, பொம்மை சேகரிப்போர் கூறுகின்றனர்.

இந்தியாவில், வாகன பொம்மை, 100 முதல், 150 ரூபாய் விலையில் கிடைக்கிறது; குறிப்பிட்ட சொகுசு கார் ரக பொம்மை, 1,500 முதல், 3,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த ப்ரூஸ் பாஸ்கல் என்பவரிடம், 3,500 பொம்மை வாகனங்கள் உள்ளன. இவற்றில் பல அபூர்வமாக கிடைப்பவை. இவற்றின் மதிப்பு, 7.14 கோடி ரூபாய். இவரது சேகரிப்பில் உள்ள பழைய வாகன பொம்மைகளை வாங்க, கோடீஸ்வரர்கள் போட்டி போடுகின்றனர்!

வாகன பொம்மை தயாரித்து விற்போர் இணைந்து, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில், ஒரு அமைப்பை துவக்கியுள்ளனர். பொம்மைகளை மாற்றுதல், பழுதுநீக்குதல், விற்றல், வாங்கல் போன்ற பணிகளுக்கு இந்த அமைப்பு உதவுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us