தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வயலின் வனிதா! (15)

வயலின் வனிதா! (15)

வயலின் வனிதா! (15)


PUBLISHED ON : ஜூன் 07, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 07, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: வனிதா வயலின் வாசிப்பதை விரும்பாத அத்தை அவளுக்கு நிறைய வேலைகள் கொடுத்தாள். இனி-

இரவு சமையல் பாத்திரங்கள் கழுவப்படாமல் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

''இந்த பாத்திரங்களையெல்லாம் கழுவி அடுக்கு, அதன் பிறகு வீடு முழுவதும் சுத்தம் செய்!'' என்று ஆணை பிறப்பித்தாள்.

''குளித்துவிட்டு வந்து சமையல் காரியங் களுக்கு ஒத்தாசையாக வா, காய்களை நறுக்கி வை!'' என்றாள்.

முற்றும் துறந்த முனிவரைப் போல எவ்வித ஆசாபாசங் களுக்கும் ஆட்படாமல் பள்ளிக்கூடம் போய் வந்து கொண்டி ருந்தாள். தன்னை வேவு பார்க்க லீலாவுக்கு இடம் தராமல், பள்ளியிலிருந்து நேரே வீடு திரும்பினாள் வனிதா.

வீட்டுக்கு வந்ததும் தன் அறைக் குள்ளேயே முடங்கிக் கிடந்தாள். அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாலும், அவள் மனம் கட்டுப்பாடின்றி அலைந்தது. பரசுராமன் கடையின் நினைவு, சனிக்கிழமை நெருங்க, நெருங்க கடிக்க லாயிற்று. மெல்ல, மெல்லத் துணிச்சல் தலை தூக்கலாயிற்று. எந்த ஒன்றுமே அடங்க முற்படும்போது தான் அது ஆவேசத்தோடு திமிறிக் கொண்டு எழும் என்பர். அது உண்மைதான். வனிதா அத்தை விதித்துள்ள தடைகளை மீறுவ தென்று முடிவுக்கு வந்தாள். மியூசிக்ஷாப்- பரசுராமிடம் போய் அத்தை ஏதாவது கூறியிருப்பாளோ? என்ன கூறி இருப்பாள்? 'இனி வனிதா உங்கள் கடைக்கு வேலைக்கு வரமாட்டாள். நீங்கள் அவளை வேலைக்கு அமர்த்திக் கொள்ளக் கூடாது.' இப்படி ஏதாவது கூறி இருப்பாளோ? அதைத் தெரிந்து கொள்ளத் தவித்தது அவள் மனசு.

அந்த சனிக்கிழமை காலையில் எழுந் ததுமே, அத்தை உத்தரவு போட்டு விட்டாள்.

''இன்று பள்ளிக்கூடம் அரைநாள்தானே? போகா விட்டாலும் பரவாயில்லை. அவசியம் போகணும் என்றால் டெஸ்ட் முடிந்ததும், நேரே வீட்டுக்கு வரணும் தெரிந்ததா? அந்தக் கடைக்குப் போவதை மறந்துடு என்ன?''

வனிதா மவுனமாகத் தலையாட்டினாள். ஆனால், அதன்படி நடப்பதற்காக அல்ல. தடையை மீறிச் செயல்படுவதென்று முடி வெடுத்து இரண்டு நாட்களாயிற்று. எப்படிச் செயல்படுத்துவது என்று தான் யோசித்துக் கொண்டிருந்தாள். அந்த சனிக்கிழமை டெஸ்ட் கிடையாது என்று டீச்சர் சொன்ன போது, அவளுக்கு வியப்பான வியப்பு! மகிழ்ச்சியான மகிழ்ச்சி.

ஒரு வாரம் பட்ட வேதனையை யெல்லாம் மறந்தது அந்தக் குழந்தை மனம். பரசுராமின் கடையை நோக்கி அவள் கால்கள் நடந்தன. கடையை நெருங்க, நெருங்க மகிழ்ச்சியும், அதிர்ச்சியும், ஏமாற்றமும் உள்ளத்தைக் குழப்பின.

பரசுராமின் கடையை வனிதா அடைந்த போது உள்ளே அவர், யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். தன் நெஞ்சு படபடப்பை நிதானப்படுத்திக் கொண்டு நின்றாள் வனிதா.

''நீங்கள் கேட்டிருந்த 'சிடி'யை அன்றைக்கே வரவழைத்து விட்டேன். உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நீங்களே வந்து வாங்கிக் கொள்வதாகக் கூறி இருந்ததினால்தான், நான் அதை உங்கள் வீட்டுக்கு அனுப்பவில்லை. இல்லாவிட்டால் அன்றைக்கே அதை வீட்டுக்கு அனுப்பி இருப்பேன்...'' என்றார்.

பரசுராமின் வாய் பேசிக் கொண்டி ருந்ததே தவிர, கைகள் ஒவ்வொரு டிராயராக, பெட்டியாகத் தேடிக் கொண்டிருந்தன. அவரது விரல்கள் நிதானமிழந்து பரபரத்தன. முகத்தில் கவலையின் ரேகைகள்; தனக்குத் தானே பேசிக் கொண்டார். வந்தவர் மவுன மாக நின்று கொண்டிருந்தார்.

''கை மறதியா எங்கேயோ வைத்து விட்டேன். வயசாயிட்டுதில்லையா...'' தன் தேடல் பலன் தராததற்கு சமாதானம் கூறினார் பரசுராமன்.

''இன்று மாலை ஒரு நிகழ்ச்சிக்கு அது அவசியம் தேவை. ரொம்ப நம்பிக்கை யோடிருந்தேன். அந்த மேலை நாட்டு இசையோடு, நம் நாட்டு இசையையும் கலந்து ஒரு புதுமையைச் செய்யத் திட்ட மிட்டிருந்தேன். இப்படி ஏமாற்றமளித்து விட்டீர்களே...'' காத்திருந்தவரின் குரலில் எரிச்சலும், கடுமையும் கூட ஆரம்பித்தன.

அந்த வாடிக்கையாளரின் உடையும், தோற்றமும் அவர் முக்கியப் புள்ளி என்பதை உணர்த்தியது.

'பாவம் பரசுராம்... தனியாக எவ்வளவு கஷ்டப்படுகிறார். அந்த 'சிடி'யை, எங்கோ வைத்து விட்டுத் தேடுகிறார். பதட்டத்தில் வைத்த இடம் நினைவுக்கு வரவில்லை' வனிதா இப்படி நினைத்துக் கொண்டிருந்த போது, அந்த வாடிக்கையாளர் கோபத்தோடு வெடித்தார்.

''இப்படி ஆகும்னு தெரிந்திருந்தால் நான் உங்களிடம் ஆர்டர் கொடுத்திருக்கவே மாட்டேன். நீண்ட நாள் பழக்கம் என்பதற் காகவும், இசையில் உங்களுக்குள்ள ஈடுபாட்டுக்காகவும்தான் உங்களிடம் என் தேவைகளுக்கு ஆர்டர் கொடுத்து வருகிறேன். இனி நான் வேறு இடம் பார்த்துக் கொள் கிறேன். இன்று மாலை 'டியூன் கம்போ'சாகி நாளை காலை ரிகார்டிங் என்று முடிவாகி விட்டது. எல்லா வற்றையும் நாசமாக்கி விட்டீர்கள். குட்பை!'' என்று கூறி விருட் டென்று வெளி யேறினார் அந்தப் பிரமுகர்.

திகைத்துப் போய் செய்வதறியாது நின்றிருந்த பரசுராமன், ''சார்... சார்! கோஸ்வாமி...'' பரபரப்போடு அவரைத் தடுத்து நிறுத்த முயற்சிக்க, வேகமாக வாசலுக்கு வந்தார். ஆனால், கோஸ்வாமியின் கார், புகையைத் துப்பி விட்டு விசுக்கென்று நகர்ந்து விட்டது. ஏமாற்றத்தோடு தொய்ந்து போன அவர் பார்வை, வாசல் படியில் நிற்கும் வனிதாவின் மீது பதிந்தது.

''வனிதா! இங்கே இந்த நேரத்திலே எங்கேம்மா வந்தே?'' உற்சாகமின்றிக் கேட்டார்.

''இன்று ஸ்கூலில் டெஸ்ட் இல்லை சார். அதனால் சீக்கிரமாக வந்துட்டேன். அவர் கோபமாக போனதைப் பார்த்தேன் என்ன 'சிடி' சொல்லுங்க சார். நான் தேடித் தரேன்!'' என்றாள் வனிதா.

பெருமூச்சு விட்டார் பரசுராமன்.

''அவர் பெரிய மியூசிக் டைரக்டர். சினிமா உலகில் பெரும் புள்ளி. இன்று அவர் நட்பை இழக்கும்படியாயிற்று என் ஞாபக மறதி யினால். அது சரி நீ ஏன்?'' என்று வினா எழுப்பி முடிக்காமல், நிறுத்தி வனிதாவை உற்றுப் பார்த்தார். அவள் நெஞ்சு தடக் தடக்கென்று அடித்துக் கொண்டது.

''உன் அத்தை இங்கு வர அனுமதித்து விட்டாரா?'' என்று கேட்டார்.

''அத்தை உங்களைச் சந்தித்தார்களா சார்?'' என்று கேட்டாள் வனிதா.

''ஆமாம். உன்னைப் பற்றியும் சொன்னாள்...'' என்று கூறியபடி தன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார்.

''நீ இப்படி நேர்மை இல்லாதவள்னு நான் நினைக்கவில்லை. எனக்கு உன் அத்தை கூறியது அதிர்ச்சியாக இருந்தது!'' வனிதாவைப் பார்க்காமலேயே பேசினார் பரசுராமன்.

வனிதாவுக்குப் புரிந்து விட்டது. தன்னைப் பற்றி அத்தை என்ன சொல்லி இருப்பாள் என்று. அந்தப் பணத்தை எடுத்தது நானல்ல... அவங்க மகள் லீலாதான் என்று உண்மையைக் கூறினால் யார் நம்ப போகின்றனர்?

''சார்... அத்தை கூறியது போல நான் இல்லே சார்...'' வனிதாவின் குரல் கம்மியது.

''நான் அந்தப் பணத்தைத் தொடக் கூட இல்லை. அவங்க விருப்பத்துக்கு மாறாக வயலின் வாசிச்சதுதான் நான் செய்த குற்றம். வேறு ஒண்ணும் இல்லே சார்!'' அவள் தொண்டை அடைத்துக் கொண்டது. பேச முடியாமல் கண்களிலிருந்து நீர் பொலபொல வென்று உதிர்ந்தது.

வனிதாவின் நிலையைப் பார்த்து நெகிழ்ந்து போனார் பரசுராமன். ஆனால், பதில் ஏதும் கூறாமல் தன் மேஜை மீது இறைந்து கிடந்த பொருள்களை ஒழுங்கு படுத்துவதில் முனைந்தார். அப்போது திடீரென்று மகிழ்ச்சிக் கூச்சல் வெளிப்பட்டது அவரிடமிருந்து.

''அடக்கடவுளே! இந்த 'சிடி' என் மேஜை மீதே இருக்கு. நான் வேறு எங்கெங்கோ தேடினால் அது எப்படிக் கிடைக்கும்?'' என்று சிறிய பார்சலை கையில் வைத்துக் கொண்டு தெருவையே பார்த்தார்.

''கோஸ்வாமியின் கோபத்துக்கு ஆளாக வேண்டும் என்று இருக்கும்போது அதை எப்படித் தடுக்க முடியும்?'' என்று விரக்தி யோடு, அந்தச் சிறிய பார்சலை தன் மேஜை மீது போட்டார்.

கண்களைத் துடைத்துக் கொண்டு அந்தப் பார்சலைப் பார்த்த வனிதாவின் கண்கள் விரிந்தன.

''சார், இந்த பாக்கெட்டை நான்தான் போன சனிக்கிழமை உங்கள் மேஜையின் மீது வைத்தேன். 'சிடி' அலமாரியை ஒழுங்கு செய்தபோது பிரிக்கப்படாத இந்த பாக்கெட் இருந்தது. 'யாருக்காகவோ விசேஷமாக வரவழைத்திருக்கிறீர்கள்' என்று நினைத்து அதை உங்கள் பார்வையில் படும்படி உங்க மேஜையில் கொண்டு வந்து வைத்தேன்!'' என்றாள்.

பரசுராமன் கண்களை மலர்த்தி களங்கமற்ற வனிதாவின் முகத்தைப் பார்த்தார்.

பிறகு, ''வனிதா, எனக்கு ஒரு உதவி செய். கோஸ்வாமியோட விலாசம் தரேன். இந்தப் பார்சலை அவர் வீட்டில் கொண்டு போய்க் கொடுத்துடணும் முடியுமா?'' என்று கேட்டார்.

''கொடுத்துடறேன் சார்! பாவம், அவர் ரொம்ப நம்பிக்கையோட இதுக்காக வந்தார் போலிருக்கு. இதைப் பார்த்தார்ன்னா.... அவர் கோபங்கூடப் போய்விடும். கொடுங்க சார் இப்பவே போறேன்!'' என்று கை நீட்டினாள்.

- தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us