PUBLISHED ON : ஏப் 13, 2018

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
வல்லாரை கீரை - 4 கப்
உளுத்தம் பருப்பு - 2 கப்
காய்ந்த மிளகாய் - 4
புளி - 1 எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கடாயில், இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, வல்லாரை கீரை, மிளகாய், புளியை வதக்கவும். பின், கடாயில், இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பை நன்கு சிவக்க வறுக்கவும்.
வதக்கிய கீரை, மிளகாய், புளியை அரைத்து, மேலும், வறுத்த உளுத்தம் பருப்பு, உப்பு சேர்த்து சற்று, கொர கொரப்பாக அரைத்து, கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
இந்த வல்லாரை துவையலை, சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்; இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
வல்லாரை கீரை, ஞாபக சக்தியை தரும்; உளுத்தம் பருப்பு, எலும்பு வலுவடைய செய்கிறது.
- வா.தேவகி, சென்னை.
