PUBLISHED ON : ஏப் 13, 2018

அ நிறம் | அளவு
நம் உடலில் சூரிய ஒளி படாமலே வாழ்ந்தால், எலும்புகள் வலுவிழக்கின்றன!
சூரிய ஒளி, உடலில் படும் போது, தேவையான, வைட்டமின் 'டி' கிடைக்கிறது.
இதனால், உடலுக்கு ஏற்படும் பல நன்மைகளில், மகத்தான நன்மை, உடலில் உள்ள அனைத்து எலும்புகளுக்கும், கடினத்தன்மையும், பலமும் கொடுக்கிறது.
குறிப்பாக, தற்கால இளைய சமுதாயம், சூரிய ஒளியை, உடம்பின் மேல் படவிடுவதேயில்லை; இதன் விளைவு, நடுத்தர வயதிலேயே, Osteo porasis என்ற வியாதி.
அதாவது, எலும்புகள், பலத்தை இழந்து, சிறிது அடிபட்டாலும், உடைந்து, நொறுங்கி போகிற அளவுக்கு, பலவீனம் அடைந்து விடுகின்றனவாம். குழந்தைகளுக்கு கூட, சூரிய ஒளிபடும்படி வளர்த்தால், கண் பார்வை மேம்பட்டு, உபாதைகள் வராமல், பார்த்துக் கொள்ளுமாம்.
