தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/'வீ டூ லவ்' சிறுவர் மலர்!

'வீ டூ லவ்' சிறுவர் மலர்!

'வீ டூ லவ்' சிறுவர் மலர்!


PUBLISHED ON : மார் 03, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 03, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் பெயர் மைதிலி; வயது 79; சென்னை மயிலாப்பூரில் வசிக்கிறேன். கடந்த, 20 ஆண்டுகளாக நாங்கள் சிறுவர்மலர் வாசகர்கள். வெள்ளிக்கிழமை எப்போது வரும் என்று, சிறுவர்மலர் இதழை படிக்க, ஆவலுடன் காத்திருப்பேன். என் மாமியாரும், 97 வயது வரை சிறுவர்மலர் இதழை ஆவலுடன் படித்தார். தற்போது தவறிவிட்டார்.

ஒரு தட்டு நிறைய இனிப்பு பலகாரங்களை வைத்து, இதில், எது பிடிக்கும் என கேட்டால், அதற்கு பதில் சொல்வது மிகவும் கடினம். சிறுவர் மலர் இதழும் அப்படித்தான். இதில் எல்லா பகுதிகளுமே நல்முத்துக்கள். நாளுக்கு நாள் சிறுவர்மலர் இதழ், பட்டை தீட்டிய வைரம் போல் ஜொலிக்கிறது. இளஸ்... மனஸ், ஸ்கூல் கேம்பஸ், ஏல இங்கிலீஷ் பேசலாம் வாரீயால... எல்லாமே படு ஜோர்.

சிறுவர்மலர் இதழ் என பெயரை வைத்து விட்டு, A to Z என அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் மலராக கலக்குகிறீர்களே!

வளர்க உங்கள் சிறுவர்மலர் இதழ்!

- வி.மைதிலி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us