PUBLISHED ON : மார் 03, 2017

டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள், 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.
புடலங்காய் வெஜ் ரிங்!
தேவையான பொருட்கள்: கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - ௧/2 கப், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், சோம்பு - 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன், புடலங்காய் - 1, வெங்காயம் - 1, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
புடலங்காயில் உள்ள விதைகளை நீக்கி, வட்ட வட்டமாக நறுக்கவும். வெங்காயத்தையும் ரிங் வடிவத்தில் நறுக்கவும். அகலமான பாத்திரம் ஒன்றில் அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய் தூள், உப்பு, சோம்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றுடன், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவாக கலந்து கொள்ளவும்.
பின், வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், புடலங்காய், வெங்காயத்தை மாவில் புரட்டி எடுத்து, எண்ணெயில் பொரித்தால், சுவையான, 'புடலங்காய், வெங்காய வெஜ் ரிங்' ரெடி.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனை வரும் விரும்பி உண்பர். மாலை, 'ஸ்நாக்ஸ்'க்கு ஏற்றது. புடலங்காயில் வைட்டமின் ஏ,பி, சி உள்ளது. நார்ச்சத்தும், புரதச்சத்தும் மிகுதியாக உள்ளதால், ஆரோக்கியம் நிறைந்தது. புடலங்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.
- அ.விஜயலட்சுமி, தேவகோட்டை.
