PUBLISHED ON : மார் 31, 2017

எனக்கு வயது 60, உதவி மருந்துவராக, 1982ம் வருடம் பணியில் சேர்ந்தேன். அன்று முதல் இன்று வரை தினமலர் வாசகன். தற்போது, கிளை இயக்குனராக பதவி வகித்து, ஓய்வும் பெற்றுவிட்டேன்.
சிறுவர்மலர் இதழை தொடர்ந்து படித்து வரும் சிறுவன் நான். எங்கள் துறை சம்பந்தமாக கூட்டங்கள், விழாக்கள் நடைபெறும் போதெல்லாம் என்னை பேச அழைப்பர். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சிறுவர்மலர் இதழில் வெளிவரும் நீதிக்கதைகளை குறிப்பிட்டு, என் பேச்சுக்கு மெருகூட்டுவேன். பல ஆண்டுகளாக சேர்த்து வைத்த சிறுவர்மலர் இதழ்கள் என்னிடம் நிறைய உள்ளது.
கால்நடை மருத்துவ அறிவியலில், சிறுவர்களுக்கு பயன்படும் செய்திகளை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது என் விருப்பம். சிறுவர்களுக்காக வெளியிடும் இதழ்களில், 'சிறுவர்மலர்' முதன்மை இடத்தை பிடித்துள்ளது என்பது, என்னுடைய கருத்து. நாங்களும் சிறுவர்மலர் இதழை நேசிக்கிறோம்!
- வி.ராஜேந்திரன், நத்தம்.
