PUBLISHED ON : மார் 31, 2017

* கொழுப்பு சத்து அதிகம் இல்லாத நல்லெண்ணெய், சூரியகாந்தி மற்றும் அரிசி தவிடு எண்ணெய்யை பயன்படுத்துங்கள். கடலை எண்ணெய்யில் நிறைய கொழுப்பு உள்ளதால், குறைவாக பயன்படுத்தவும். தேங்காய் எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு, உடலுக்கு பல நன்மைகள் தருவதால் பயன்படுத்தலாம்
* உதிரியாக வாங்குவதை தவிர்ப்பது நல்லது
* எல்லா எண்ணெயுமே பழுப்பு நிறத்தில் தான் இருக்க வேண்டும்
* சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வாங்கும்போது, அது இயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்டதா... என பார்த்து வாங்குங்கள். மணம், நிறம் மற்றும் சுவையும் மிகுந்திருக்கும்; ஆரோக்கியமானதும் கூட. செயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யில் ரசாயன கலப்பு இருக்கும்
* ஆறு மாதத்துக்கு ஒருமுறை சமையல் எண்ணெய்யை மாற்றுங்கள். நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், அரிசி தவிடு எண்ணெய், தேங்காய் எண்ணெய் என மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் ஒரே மாதிரியான சத்துக்கள் உடலில் தங்க வாய்ப்புள்ளது
* கண்ணாடி மற்றும் தகர புட்டிகளிலுள்ள எண்ணெய்யில், சத்துக்கள் பாதுகாக்கப்படுகிறது. இதை பயன்படுத்துவது உடலுக்கு நல்லது
* பிராண்ட் பெயர், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, விலை, நிறுவன முகவரி ஆகிய தகவல்கள் அடங்கிய லேபிள் இல்லாமல், வருகிற எந்த எண்ணெயையும் வாங்க கூடாது
* இயல்பு தன்மை மாறிவிடும் என்பதால், புதிய எண்ணெயுடன், பயன்படுத்திய எண்ணெயை கலக்க கூடாது
* காலாவதி தேதி தெரிய வாய்ப்பில்லை என்பதால், இணையதளம் மூலம் வாங்க வேண்டாம்.
