PUBLISHED ON : மார் 31, 2017

அ நிறம் | அளவு
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும், 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.
இட்லி போன்டா!
புளிச்ச இட்லி மாவு, 5 கரண்டி, 1 கரண்டி மைதா மாவு, சிறிது சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்றாக கலக்கவும்.
பின், எண்ணெய் ஊற்றி, போன்டா போல பொரித்து எடுத்தால், சுவையான, இட்லி போன்டா ரெடி.
இது மாலை நேரத்திற்கு ஏற்ற சிற்றுண்டி. குழந்தைகள் விரும்பி உண்பர்; செய்வதற்கும் சுலபமானது!
- பத்மஜா, சென்னை.
