PUBLISHED ON : செப் 25, 2021

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என் வயது, 66; வழக்கறிஞராக உள்ளேன்; தினமலர் நாளிதழின் தீவிர வாசகன். எல்லா வயதினருக்கும் பொருந்தும் அறிவு பெட்டகமாக உள்ள, சிறுவர்மலர் இதழின் நேசகன்.
சிறுவயது குறும்பை எடுத்துக்கூறும், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி மிக உன்னதமானது; நீதி நெறிகளை அள்ளி தரும் சிறுகதைகள், படக்கதை, குபீர் சிரிப்பு தரும், 'மொக்க ஜோக்ஸ்!' எல்லாம் சிறப்பு. குழந்தைகள் வரைந்த, 'உங்கள் பக்கம்!' பகுதி படங்கள் ரசனை மிக்கவை.
அறிவியல், வரலாறு, உணவியல் மற்றும் உளவியல் சார்ந்து வரும் கட்டுரைகள், இதழுக்கு தனித்தன்மை தருகின்றன. சிறுவர்மலர் இதழ் சிறப்பாக மலர்ந்து, விற்பனையில் விண்ணைத்தொட, மனமார வாழ்த்துகிறேன்!
- முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி, மதுரை.
தொடர்புக்கு: 94432 66674

