PUBLISHED ON : பிப் 17, 2017

நல்லதமிழ், சரித்திர புராணக்கதைகள், நல்ல கருத்துக்கதைகள், ஊக்க மூட்டும் புதிர் போட்டிகள், நாடு, மாமனிதர்கள் பற்றிய அரிய தகவல்கள், அறிவியல் செய்திகள் என எல்லாமுடையது என் அபிமான சிறுவர்மலர் இதழ்.
நான் ஒரு புத்தகப்பிரியன். பல தகவல்களை, சிறுவர்மலர் சுட்டிக் காட்டும் போது, பள்ளி பருவ நினைப்பில் இன்றும் குறிப்பெடுத்துக் கொள்கிறேன். 80 வயதை கடந்த என் தாயும், நானும், என் குழந்தைகளும், சிறுவர்மலர் இதழை ஒரு பொக்கிஷமாக போட்டி போட்டு படித்து பாதுகாக்கிறோம்.
கருத்துக்களையும், ஓவிய கதைகளையும் சிறுவர்களுக்கு விரிவாக எடுத்து கூறும் போது ஆனந்தம் பொங்குகிறது. முதியோர் இல்லம், சிசு பாதுகாப்பு இல்லம் என சுருங்கிப்போய், தனி குடுத்தனம் என சீரழியும் சமூக அவலத்தில், மகிழ்வாய் வாழ்வது எப்படி, என்று சிறுவர்மலர் ஆற்றும் தொண்டு மகத்தானது.
பண்டிகை, விசேஷ நாட்கள் பற்றி எதுவுமே புரியாமல் இருப்போருக்கு, கட்டுரைகளின் மூலம் சிறுவர்மலர் விளக்குவது மிகச்சிறப்பு.
இன்று, 60 வயதை கடந்தவனாக, தொடர்ந்து டயலிசிஸ் செய்து வாழும் எனக்கு, தோழனாய், சேவகனாய், காதலியாய், பயனுள்ள பண்பாளனாய் விளங்குவது சிறுவர்மலர் இதழ்.
- என். திருமலை, கோயம்புத்தூர்
