PUBLISHED ON : நவ 23, 2018

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த, 27 ஆண்டுகளாக, சிறுவர்மலர் படித்து வரும் ஆசிரியர் நான். வகுப்பில், நீதிபோதனை பாடம் வரும்போதெல்லாம், எனக்கு உற்ற துணையாக இருப்பது, இவ்விதழில் வரும் சிறுகதைகள் தான். அக்கதைகளை, கூறி, அதில் உள்ள நீதிகளை சொல்வேன். மாணவ மாணவியர் மிகவும், ஆர்வமாக, ரசித்துக் கேட்டு, அதன்படி நடக்க துவங்குகின்றனர்.
இப்போது, நான், ஒரு சிறந்த கதை சொல்லியாக இருக்கிறேன்; அதற்கு முழுக் காரணம், சிறுவர்மலர் இதழ் என்றால், அது மிகையாகாது.
- கா.முத்துச்சாமி, தொண்டி.