PUBLISHED ON : ஜூலை 26, 2019

பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பணிக்காலத்தில், மதிய உணவுக்குப் பின், பள்ளி கருத்தரங்க மண்டபத்தில், மாணவர்களை அமர வைத்து, சிறுவர்மலர் இதழ்களை படிக்க கொடுப்பேன்.
படித்தவற்றை தொகுத்து, மறுநாள் ஒரு மாணவரைக் கூற சொல்வேன்; அவர் கூறியதில் புரிந்து கொண்டவற்றை, மற்றொரு மாணவனை அழைத்து சொல்ல வைப்பேன். இப்படி, தொடர்ச்சியாக அறக்கருத்துக்களை போதித்தேன்.
என் பேரன், பேத்தியின் புகைப்படங்கள், சிறுவர்மலர் இதழில், 'குட்டி குட்டி மலர்கள்!' பகுதியில் பிரசுரமாகியுள்ளன. என் மனைவி, வாசகர் பகுதிக்கு கடிதம் எழுதி பரிசு பெற்றுள்ளார். பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றும் என் மகளும், சிறுவர்மலர் வாசகி தான்!
எனக்கு, 66 வயதாகிறது. சமீபத்தில், என் பழைய மாணவர் ஒருவரை சந்தித்தேன்; ஆசிரியராக பணி செய்து வருகிறார். அவரும், என் வழியில், மதியவேளைகளில், சிறுவர்மலர் இதழ்களை கொடுத்து, மாணவர்களை படிக்க வைப்பதாக கூறினார்.
என் முயற்சி வீண் போகவில்லை என, மகிழ்ச்சி அடைந்தேன்.
- எஸ்.பாலசுப்பிரமணியன், ராமநாதபுரம்.
தொடர்புக்கு: 94871 67543
