தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மீன் சாப்பிடுங்கப்பா!

மீன் சாப்பிடுங்கப்பா!

மீன் சாப்பிடுங்கப்பா!


PUBLISHED ON : ஜூலை 26, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 26, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆஸ்திரேலியா கண்டம், நியூசிலாந்து, மஸ்சே பல்கலைக்கழக பேராசிரியர், வெல்மா ஸ்டோன் ஹவுஸ் தலைமையிலான குழு, நினைவுத்திறனுக்கும், மீன் உணவுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதற்காக, 175 பேரை தேர்ந்தெடுத்து நினைவுத்திறன், அறிவுக் கூர்மை பற்றி மதிப்பீடு செய்தது.

பின், வஞ்சீரம், இறால் உள்ளிட்ட கடல் மீன் உணவுகளை, தொடர்ந்து, ஆறு மாதங்கள் கொடுத்தனர். மீண்டும் அவர்களின் நினைவுத்திறன், அறிவுக்கூர்மையை பரிசோதித்தனர். நினைவுத்திறன், 15 சதவீதம் அதிகரித்திருந்தது.

மீன்களில், 'ஒமேகா - 3' என்ற கொழுப்பு அமிலம், நினைவுத்திறனை அதிகரிக்க உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அமிலம் மனித உடலில் நேரடியாக உருவாகாது; மீன்களை சாப்பிடுவதன் மூலமே உருவாகும். இது, மூளை செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம்.

'மீன் உணவு, மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைத்து, மனநலத்தை மேம்படுத்துகிறது...' என, பேராசிரியர் வெல்மா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us