PUBLISHED ON : ஆக 09, 2019

கல்லுாரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறேன்; தாய்மொழியை எழுத்து கூட்டி படிக்க துவங்கியது முதல், என் உயிரோடு கலந்து விட்டது சிறுவர்மலர்.
பள்ளியில் படித்த போது, சிறுவர்மலர் இதழில் பிரசுரமாகும் கட்டுரைகளில் இருந்து தகவல்களை மேற்கோள் காட்டி பேசி, பரிசுகளை வென்றுள்ளேன்; நடுவர்களின் பாராட்டு மழையில் நனைந்துள்ளேன்.
கல்லுாரியில் படித்த நாட்களில், சாக்ரடீஸ், அரிஸ்டாடில் போன்ற அறிஞர்கள் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களை, என் இனிய சிறுவர்மலர் இதழில் படித்து, என்னை பக்குவப்படுத்திக் கொண்டேன்.
இவ்வாறு படித்து பெற்ற அறிவு பெட்டகத்தை, கல்லுாரி பணியில் சேர்ந்த பின், வகுப்பில் சுவை பட எடுத்துரைப்பேன். அதை கேட்க, மாணவர்கள் ஆவலுடன் காத்திருப்பர்.
என்னை வார்த்து, வடிவமைத்து, வளர்ச்சியில் உறுதுணையாக உள்ளது சிறுவர்மலர். நான் வாழும் வரை, வாசிப்பேன்; நேசிப்பேன்; சுவாசிப்பேன்.
- கோ.பெ.இளந்திரையன், சென்னை.
